ஐ.நா., நல்லெண்ண துாதரானார் மதுரை சலுான் கடைக்காரர் மகள்

Updated : ஜூன் 06, 2020 | Added : ஜூன் 06, 2020 | கருத்துகள் (16)
Advertisement
மதுரை; பிரதமர் மோடி, 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் பாராட்டிய, மதுரை சலுான் கடைக்காரர் மோகன் மகள் நேத்ரா, 14, என்பவரை, ஏழைகளுக்கான நல்லெண்ண துாதராக, ஐ.நா., சபை அறிவித்துஉள்ளது.மதுரை மேலமடையில் சலுான் கடை நடத்தி வரும் மோகன், மகள் படிப்பிற்காக சேமித்த, 5 லட்சம் ரூபாயை, மகள் விருப்பப்படி, ஊரடங்கில் தவித்த ஏழைகளுக்கு நிவாரணப் பொருட்களாக வழங்கினார். இதை, 'மன் கீ பாத்'

மதுரை; பிரதமர் மோடி, 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் பாராட்டிய, மதுரை சலுான் கடைக்காரர் மோகன் மகள் நேத்ரா, 14, என்பவரை, ஏழைகளுக்கான நல்லெண்ண துாதராக, ஐ.நா., சபை அறிவித்துஉள்ளது.



latest tamil news



மதுரை மேலமடையில் சலுான் கடை நடத்தி வரும் மோகன், மகள் படிப்பிற்காக சேமித்த, 5 லட்சம் ரூபாயை, மகள் விருப்பப்படி, ஊரடங்கில் தவித்த ஏழைகளுக்கு நிவாரணப் பொருட்களாக வழங்கினார். இதை, 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பாராட்டினார்.

இதை தொடர்ந்து, ஐ.நா.,வின் நல்லெண்ண துாதராக, நேத்ராவை அறிவித்து, 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்குவதாக, ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.வறுமையே இருக்கக்கூடாதுநேத்ரா கூறியதாவது:நேற்று முன்தினம், ஐ.நா., சபையில் இருந்து இத்தகவல், மொபைல் மூலம் எனக்கு தெரிவிக்கப்பட்டது. நியூயார்க், ஜெனிவாவில் நடக்கும், ஐ.நா., கூட்டத்தில் பேச வேண்டும் எனவும் தெரிவித்தனர். பிரதமரால் தான், நாங்கள் செய்த சேவை வெளியுலகிற்கு தெரிந்தது. இதனால் தான், எனக்கு இந்த கவுரவம் கிடைத்துள்ளது. நான், ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். ஐ.ஏ.எஸ்., படிக்க வேண்டும் என்பதே லட்சியம். படிப்பிற்குரிய பணம் செலவானால், அதை சம்பாதித்து தருவேன் என்ற நம்பிக்கை கொடுத்த பின் தான், அப்பா மோகன், அம்மா பாண்டிச்செல்வி, 1,500 குடும்பங்களுக்கு நிவாரணமாக வழங்கினர்.


latest tamil news



.உலகில் வறுமையே இருக்கக்கூடாது என்பதே என் கனவு. கனவை நிஜமாக்க நாளெல்லாம் உழைக்கப் போகிறேன். என்னை ஊக்கப்படுத்திய அமைச்சர்கள் உதயகுமார், ராஜு, கலெக்டர் வினய், படிப்பு செலவை ஏற்பதாக கூறிய நடிகர் பார்த்திபன், பஸ்கோஸ் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
09-ஜூன்-202009:11:01 IST Report Abuse
Bala Murugan " ஏழைகளுக்கான நல்லெண்ண தூதர் " - பட்டம் நன்றாகத்தான் இருக்கு. ஆனால் பொருத்தமானவர் இல்லை. அந்த பெண் அடம்பிடித்திருப்பாள். வீட்டில் ஒத்துழைக்க மறுத்திருப்பார்கள். வீண் விவாதம் மற்றும் அடம் பிடித்து சாப்பிடாமல் இருந்து பெற்றோரை வற்புறுத்தி நடந்தது. உடனே நடந்தது இல்லை. பார்ப்போம். எப்படி இருக்கிறாள்? என்ன செய்கிறாள்? என்ன ஆகப்போகிறாள்? என்று......
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
06-ஜூன்-202021:28:40 IST Report Abuse
konanki வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
raman - chennai,இந்தியா
06-ஜூன்-202018:38:17 IST Report Abuse
raman இந்த பெண் எப்படி என்று தெரியவில்லை. ஆனால் புகழுக்காகவும் பிறரின் பார்வையை கவர்ந்து தனக்கு பெரிய ஆதாயத்தை தேடுவது இப்போது பேஷன் ஆகி விட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X