பொது செய்தி

இந்தியா

ரயில்வே போலீசுக்கு அமைச்சர் ரொக்கப் பரிசு

Updated : ஜூன் 06, 2020 | Added : ஜூன் 06, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

புதுடில்லி: புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயிலில் சென்ற, மூன்று மாத குழந்தைக்கு பால் வாங்கி கொடுக்க, ரயிலுடன் ஓடிய போலீஸ்காரருக்கு, ரயில்வே அமைச்சர், பியூஷ் கோயல், ரொக்க பரிசினை அறிவித்துள்ளார்.latest tamil newsகர்நாடகாவிலிருந்து உ.பி.,யின் கோரக்பூருக்கு, சில நாட்களுக்கு முன் சென்ற, புலம் பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில், போபால் வந்தது.அங்கிருந்த, ரயில்வே போலீஸ் இந்தர் யாதவிடம், தன் மூன்று மாத குழந்தைக்கு பால் வாங்கி தரும்படி, ரயிலில் இருந்த ஷாபியா ஹாஷ்மி என்பவர் கேட்டார்.இந்தர் யாதவ் பால் வாங்கி வருவதற்குள் ரயில் புறப்பட்டதால், அதனை கொடுப்பதற்காக ஒரு கையில் துப்பாக்கி மற்றொரு கையில் பாலுடன், ரயிலுக்கு இணையாக அவர் ஓடினார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், இந்தர் யாதவுக்கு பாராட்டுகள் குவிந்தன.


latest tamil newsரயில்வே அமைச்சர், பியூஷ் கோயல், அவரை பாராட்டியதுடன், 'இந்திய ரயில்வேயின் உசேன் போல்ட்' என, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.இந்நிலையில், அவருக்கு ரொக்க பரிசு வழங்குவதாக, அமைச்சர், பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SanDan - NYK,யூ.எஸ்.ஏ
06-ஜூன்-202014:39:42 IST Report Abuse
SanDan இரண்டு உன்னதமான மனிதர்கள் - இந்தர் yaadhav, பியூஷ் கோயல்
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
06-ஜூன்-202007:52:54 IST Report Abuse
VENKATASUBRAMANIAN Hats off Mr. YADAV. Other police personnel should learn from him on public service.
Rate this:
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
06-ஜூன்-202006:56:59 IST Report Abuse
B.s. Pillai hats off to you Mr. Indar Yadav. I salute your duty minded and helping nature. Wish you grow vertically up in the ladder of your carrier.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X