பொது செய்தி

இந்தியா

2 வாரமாக எதுவும் சாப்பிடாமல் தவிப்பு யானையின் பிரேத பரிசோதனையில் தகவல்

Updated : ஜூன் 06, 2020 | Added : ஜூன் 06, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement

கொச்சி: 'வெடிகளால் நிரப்பப்பட்ட அன்னாசி பழத்தை தின்றதால், வாயில் காயங்கள் ஏற்பட்டு, இரண்டு வாரமாக எதுவும் சாப்பிட முடியாமல் தவித்து, யானை இறந்துள்ளது' என, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.latest tamil newsகேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பாலக்காடு மாவட்டம், அமைதிப் பள்ளத்தாக்கு பூங்காவைச் சேர்ந்த யானை, ஒரு கிராமத்துக்குள் உணவு தேடி சென்று உள்ளது.அங்கு இருந்தவர்கள், வெடி வைக்கப்பட்ட அன்னாசிப் பழத்தை அதற்கு கொடுத்து உள்ளனர். கர்ப்பமாக இருந்த அந்த யானை, அதைச் சாப்பிட்டபோது, வெடி வெடித்து அதன் நாக்கு, வாய் உள்ளிட்ட உறுப்புகள் சிதறின. வேதனை தாங்க முடியாமல், தண்ணீருக்குள் இறங்கி நின்று, அந்த யானை தவித்தது.வனத்துறை அதிகாரிகள், கும்கி யானையின் உதவியோடு, அந்த யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், யானைபரிதாபமாக இறந்தது.இந்த சம்பவம், நாடு முழுதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, கேரள அரசிடம், மத்திய அரசு கேட்டுள்ளது.

இந்நிலையில், கொல்லப்பட்ட யானையின் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:வெடிகள் வெடித்ததில், யானையின் வாயில் பெரும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. எரிச்சல் தாங்காமல், தண்ணீரை யானை வாயில் ஊற்றிக் கொண்டுள்ளது. இதில், அந்த காயங்கள் சீழ் பிடித்துள்ளன. வாயில் ஏற்பட்ட வலியால் துடித்த யானை, இரண்டு வாரமாக எதுவும் சாப்பிட முடியாமல், தண்ணீர் குடிக்க முடியாமல் தவித்துள்ளது.பசி மயக்கம் மற்றும் காயங்களால் ஏற்பட்ட வலியால், யானை மயங்கி விழுந்து, தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளது. வெடிப்பொருட்கள் இருந்த பழத்தை தின்றதால் தான், யானைக்கு காயம் ஏற்பட்டுள்ளது உறுதியாக தெரிகிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


latest tamil newsஇதற்கிடையில், யானையைக் கொன்ற வழக்கில் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை, வனத்துறையினர் கைது செய்து உள்ளனர். இது குறித்து, கேரள வனத்துறை அமைச்சர் ராஜு கூறுகையில், ''அன்னாசிப்பழத்தில் வெடி வைத்து, யானையைக் கொலை செய்த விவகாரத்தில், ஒருவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் பெயர் வில்சன்; தனியார் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றி வருகிறார். இந்த வழக்கில், மேலும் பலர் கைது செய்யப்படுவர்,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
06-ஜூன்-202012:29:49 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் இந்த சங்கிகள் கட்சியை வளர்க்க வெப்சீரியஸ் இந்த யானை விவகாரம் இதை வைத்து கட்சியை வளர்க்க எண்ணம் அது அங்கு உள்ள எல்லோரும் அது காட்டு எலிகள் பயிர்களை அழிப்பதை தடுக்க வைத்தது என்று இதற்க்கு பொங்கும் கோமாளிகள் புலம் பெயர்ந்த ஒரு பெண்மணி இறந்து கிடந்த தற்கு யாரும் வெளியே வரவில்லையே
Rate this:
SanDan - NYK,யூ.எஸ்.ஏ
06-ஜூன்-202014:34:21 IST Report Abuse
SanDanyou illegal immigrant, don't use my country's seal...
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
06-ஜூன்-202015:27:02 IST Report Abuse
Chowkidar NandaIndiaபைசாவிற்கும் ப்ரயோஜனமில்லாமல் கெட்டு குட்டி சுவராய் நிற்கும் கான்க்ராஸ் கட்சிக்கு உயிர் கொடுக்க, 'நானும் இருக்கிறேன்' என்று மக்களுக்கு ஞாபகப்படுத்த பப்பு நித்தம் ஒரு அறிக்கை வெளியிட்டு முயற்சிக்க, இதற்கு ஆதரவாய் பொங்கி எழும் இத்தாலி அடிவருடிகள், மார்கத்தினர் நடத்திய டெல்லி கலவரத்தில் தீயிட்டு கொளுத்தப்பட்ட அனில் ஸ்வீட்ஸ் பற்றியோ அதில் படுகொலை செய்யப்பட்டவரை பற்றியோ வாயே திறக்காதது அவர்கள் தரத்தை மட்டுமே காட்டுகிறது. ஜெய் ஹிந்த்....
Rate this:
Cancel
I love Bharatham - chennai,இந்தியா
06-ஜூன்-202012:08:30 IST Report Abuse
I love Bharatham முழு பூசணிக்காயை சோத்துல மறைக்கிறாயே ..... பினராய்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
06-ஜூன்-202009:52:05 IST Report Abuse
Lion Drsekar இந்த நிலைக்கு ஆளாக்கிய நபரைப்பற்றிய செய்தி இன்னமும் பத்திரிக்கைக்கு வரவில்லை, வாழ்க, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X