பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை கொரோனா பலி பட்டியலில் குழப்பம்

Updated : ஜூன் 06, 2020 | Added : ஜூன் 06, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Chennai, covid 19, death toll, coronavirus, corona, சென்னை, கொரோனா

சென்னை : சென்னையில் நேற்று முன்தினம்(ஜூன் 4) வரை 398 பேர் உயிரிழந்ததற்கான ஆவணங்கள் மாநகராட்சி பட்டியில் தெளிவாக உள்ள நிலையில் சுகாதாரத் துறையோ 167 பேர் மட்டுமே இறந்துள்ளதாக கணக்கு காட்டுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் கொரோனாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சில நாட்களாக 1000த்தை தாண்டி வருகிறது; இறப்புகளும் தொடர்கின்றன. சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வார்டில் தினமும் சராசரியாக 20 பேர் வரை உயிரிழக்கின்றனர். ஆனால் தினமும் தமிழக சுகாதாரத்துறை வெளியிடும் கொரோனா பற்றிய அறிவிப்பில் ஒருசில தினங்களுக்கு முன் எனக் குறிப்பிட்டு குறைந்த எண்ணிக்கையிலான இறப்புகள் கணக்கு காட்டப்படுகின்றன.

சென்னையில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 167 பேர் இறந்ததாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. ஆனால் சென்னை மாநகராட்சி ஆவணங்களில் நேற்று முன்தினம் வரை 398 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளதாக பதிவுகள் வெளிப்படையாக உள்ளன. மீதமுள்ள இறப்புகளின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை.

அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 71 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இறப்பு சதவீதத்தை குறைத்து வருகிறது.


latest tamil news



சுகாதாரத்துறை நிபுணர்கள் கூறியதாவது: கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் பட்டியலை மாநகராட்சி நேர்மையாக தயாரித்துள்ளது. ஆனால் சுகாதாரத்துறை இறப்புகளை குறைத்து காட்டுவதற்காக மற்ற காரணங்களால் இறந்ததாக கூறி மூடி மறைக்கிறது. இதனால் அரசின் செயல்பாடு சர்ச்சையாகவே உள்ளது. இதில் வெளிப்படைத்தன்மை வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
06-ஜூன்-202014:03:19 IST Report Abuse
ஆரூர் ரங் பல நோயாளிகளுக்கு கோவிட் 19 இருப்பது சவப் பரிசோதனையில்தான் தெரிய வருகிறது . இதன் விளைவாக தனியார் மருத்துவ மனைகள் திடீரென வேறு நோய் முற்றிய நிலையிலுள்ள நோயாளிகளை சிகிச்சைக்கு ஏற்கவே தயங்கும் நிலை. உண்மையான இறப்புக் கணக்கை வெளியிடுவது பீதியைதான் அதிகரிக்கும் . பொதுமக்களுக்குப் பயனளிக்காது
Rate this:
Cancel
s vinayak - chennai,இந்தியா
06-ஜூன்-202013:57:39 IST Report Abuse
s vinayak எப்படி இறந்தார்கள் என்பது தேரிந்து கொண்டு இருப்பவர்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X