பொது செய்தி

தமிழ்நாடு

மின் கட்டணம் 10 மடங்கு விதிப்பா; இல்லவே இல்லை என்கிறார் அமைச்சர்

Updated : ஜூன் 06, 2020 | Added : ஜூன் 06, 2020 | கருத்துகள் (34)
Share
Advertisement
TNEB, EB bill, lockdown, Minister for Electricity P Thangamani, மின்துறை அமைச்சர், தங்கமணி

நாமக்கல்: ''மின் கட்டணம் 10 மடங்கு விதிக்கப்பட்டுள்ளது என்பது தவறான தகவல்'' என மின்துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.

அவர் கூறியதாவது: மின்வாரியத்தில் 'டெக்னிக்கல் அசிஸ்டென்ட்' பணிக்கு ஆள் எடுப்பது ஊரடங்கு முடிந்த பின் அதற்கான பணி துவங்கும். 'கேங்மேன்' பணிக்கு நேர்முகத் தேர்வு முடிந்து ரிசல்ட் வந்திருக்கிறது. அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் தீர்ப்பு வந்தபின் அப்பணிக்கு ஆட்கள் நியமிக்கப்படுவர்.


latest tamil news


மின் கட்டணத்தை பொறுத்தவரை ஜனவரியில் என்ன கட்டணமோ அதை செலுத்த வேண்டும் என சொல்லியிருந்தோம். இப்போது புதிதாக கணக்கு எடுக்கிறோம். ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கும் தற்போது எடுத்த இரண்டு மாதங்களும் சேர்த்து நான்கு மாதமாகிறது. அந்த நான்கு மாதத்துக்கும் இரண்டு மாதத்துக்கு உண்டானதை யூனிட் பிரித்து கணக்கிட்டு மின் நுகர்வோருக்கு பில் தொகையை அனுப்பி வருகிறோம். மின் கட்டணம் 10 மடங்கு விதிக்கப்பட்டுள்ளது என்பது தவறான தகவல்.

ஊரடங்கால்அனைவரும் வீட்டில் இருந்ததால் மின் தேவை அதிகரித்துள்ளது. நடிகர் பிரசன்னாவுக்கு ஏற்கனவே மின்வாரியம் வாயிலாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அவரை பொறுத்தவரை 6920 யூனிட் மின்சாரம் பயன்படுத்தி இருக்கிறார். அதை இரண்டாக பிரித்து 42 ஆயிரம் ரூபாயும் அதற்கு முன் அவர் 13 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டாமல் இருந்த காரணத்தால் மொத்தமாக கட்ட சொல்லியிருந்தோம். அதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டது. அதையும் அவர் ஏற்றுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh - Chennai,இந்தியா
06-ஜூன்-202014:47:39 IST Report Abuse
Ramesh ரேஷன் கார்டு தாரர்களுக்கு 1000 ரூபாய் கொடுத்து மின் கட்டணம் வழியாக பிடுங்கி கொண்டனர். வாழ்க திராவிட அரசியல் ....
Rate this:
Cancel
சத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா
06-ஜூன்-202014:12:33 IST Report Abuse
சத்யமேவ ஜெயதே முன்னாள் மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராச்சாமியின் பெயரை காப்பாற்றி விட்டார் இன்னாள் மின்சார அமைச்சர் திரு. தங்கமணி அவர்கள். இனி இவரே மிகச் சிறந்த மின் துறை அமைச்சர். அதிமுக அரசு அடுத்த தேர்தலில் வீட்டுக்கு போகும் என்றால் அதற்கு கொரோனா காரணம் இருக்காது, மின் துறை அமைச்சர் திரு. தங்கமணியாக தான் இருக்கக் கூடும். திரு. பிரசன்னா அவர்களின் வாயை நீங்கள் மூடலாம். ஆனால் மிஸ்டர் பொது ஜனம் கடுப்பில் இருக்கிறார். முதலமைச்சர் தலையிட்டு இதை தீர்த்து வைக்க வேண்டும்.
Rate this:
Cancel
Varun Ramesh - Chennai,இந்தியா
06-ஜூன்-202013:59:42 IST Report Abuse
Varun Ramesh பிப்ரவரியில் கணக்கெடுப்பில் 500 யூனிட்டுகள் உபயோகம் என்று சொன்னார்கள் அப்போது மீட்டர் ரீடிங் 16800. ஏப்ரலில் கணக்கெடுப்பின்றி முந்தைய பயன்பாடான 500 யூனிட்டிற்கு அதே தொகையை கட்டச்சொன்னார்கள். இந்த அனுமானக்கணக்கின்படி மீட்டர் ரீடிங் 17300 (16800 + 500). தற்போது, ஜூன் மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் உபயோகம் 1750 யூனிட்டுகள் மீட்டர் ரீடிங் 18550. ஜூன் மாத மீட்டர் ரீடிங்கிற்கும் ஏப்ரல் மாதத்தில் பணம் கட்டிய போது இருந்திருக்க வேண்டிய மீட்டர் ரீடிங்கான 17300 க்குமான வித்யாசம் 1250 யூனிட்டுகள் (18550 - 17300). எனவே, ஜூன் மாதத்தில் 1250 யூனிட்டுகளுக்கான கட்டணத்தை வசூலிக்க வேண்டுமென்று கணிதம் சொல்கிறது. ஆனால், இவர்கள் 1750 யூனிட்டுகளுக்கு பணம் கட்டும்படி பில் அனுப்பியிருக்கிறார்கள். இவர்கள் கணக்குப்படி உபயோகம் 1750 (18550 - 16800) இது போன்ற குளறுபடிகள் அமைச்சரின் கவனத்திற்கு வராது வராமல் பார்த்துக்கொள்ளத்தானே ஊதியம் வாங்கிக்கொண்டு வேலை செய்ய நிறைய ஆட்களை நியமித்திருக்கிறார்கள். அமைச்சரும், இவர்கள் தரும் தவறான தகவல்களின் அடிப்படையில், கார்ப்பரேஷனில் தவறு நடக்கவே நடக்காதென்று மார்தட்டி முடிந்ததும், கார்ப்பரேஷன் சார்பில் நாளிதழ்களில் பிரசன்னாவுக்கு கண்டனம் தெரிவித்து குற்றங்களின் நிழல் கூட கார்ப்பரேஷன் மீது படிய விடமாட்டோம் என்று சொல்லிக்கொள்வார்கள்.
Rate this:
girinathan s - chennai,இந்தியா
06-ஜூன்-202015:28:23 IST Report Abuse
girinathan s1750 units has to be divided for two months. (actual bill for 1750 units is Rs10,030) for 875 units amount is Rs 4255 for next month 875 units amount is Rs 4255 total Rs 8510 less already paid for 500 units is Rs 1130 net payable Rs 7380 for four months consumption....
Rate this:
Allthe Best - thanjavoor,இந்தியா
07-ஜூன்-202010:50:02 IST Report Abuse
Allthe Bestமுயலுக்கு நாலு கால் என்று தெரிந்தாலும், நொண்டி முயலைப் பிடித்து வைத்துக் கொண்டு 3 கால் தான் என்று சொல்வதைப் போன்றுள்ளது....
Rate this:
Varun Ramesh - Chennai,இந்தியா
08-ஜூன்-202008:10:36 IST Report Abuse
Varun RameshMr Girinathan, Don't you think my argument is logical. Your arithmetic is indispu, but reasoning is....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X