நிரந்தரமாக மூடப்படும் அபாயத்தில் சீன திரையரங்குகள்

Updated : ஜூன் 06, 2020 | Added : ஜூன் 06, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
China, theaters in china, coronavirus, covid 19, சீனா, திரையரங்குகள், கொரோனா

பீஜிங் : 'கொரோனா' வைரஸ் தாக்கத்தினால் சீனாவில் ஆயிரக்கணக்கான திரை அரங்குகள் நிரந்தரமாக மூடப்படும் அபாயம் உள்ளதாக சமீபத்திய கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

உலகில் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகள் சீனாவில் தான் உள்ளன. அங்கு 69 ஆயிரத்து 787 திரையரங்குகள் உள்ளன. கடந்த ஆண்டு மட்டும் புதிதாக 9708 திரையரங்குகள் திறக்கப்பட்டன.

அமெரிக்காவின் 'ஹாலிவுட்'டுக்குப் பின் மிகப் பெரிய அளவில் லாபம் கொழிக்கும் தொழிலாக சீன திரைத்துறை உள்ளது. ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில் கொரோனா தொற்று பரவத் துவங்கிய பின் ஜனவரி 23ல் அந்நகரம் முற்றிலுமாக மூடப்பட்டது. இதையடுத்து அன்றைய தினமே சீனா முழுவதிலும் உள்ள திரையரங்குகளை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. கடந்த நான்கு மாதங்களாக சீன திரைத்துறையே முற்றிலுமாக முடக்கப்பட்டு இருப்பதால் 32 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


latest tamil news


இந்நிலையில் சீன திரையரங்குகளின் எதிர்காலம் குறித்து அறிய சீன திரைப்பட சங்கம் சீன திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் இணைந்து கருத்துக் கணிப்பு ஒன்றை சமீபத்தில் நடத்தின. அதன் முடிவில் 40 சதவீத திரையரங்குகள் இந்த நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வருவது கடினம் என தெரியவந்துள்ளது.மேலும் ஆயிரக்கணக்கான திரையரங்குகள் நிரந்தரமாக மூடப்படும் அபாயம் உள்ளதாகவும், திரைத்துறை மற்றும் திரையரங்கங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

'கொரோனா நெருக்கடி முடிவுக்கு வந்த பின் 10 சதவீத திரையரங்குகள் மட்டும் பழைய வேகத்தோடு இயங்க வாய்ப்புள்ளது. மற்றபடி கருத்துக்கணிப்பு முடிவுகள் உற்சாகமூட்டுவதாக இல்லை' என ஆய்வில் தெரியவந்துள்ளது. திரையரங்கம் திறப்பதற்கான தடை உத்தரவு அக்டோபர் வரை நீடித்தால் திரைத்துறையின் இந்த ஆண்டுக்கான வருவாயில் 91 சதவீதம் இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V Gopalan - Bangalore ,இந்தியா
06-ஜூன்-202015:47:31 IST Report Abuse
V Gopalan Pray Almighty the God that the Cinema Theatres and as well Cricket must and should be wiped out permanently for achievement/development of our Country. Hope, The God/Godess of Tanjore Prahadeswarar Will ensure to close down. Besides, the TASMAC too must be closed down.
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
06-ஜூன்-202014:51:18 IST Report Abuse
Indhuindian அந்த மாதிரி நிலைமை இங்கு வரக்கூடாதா? சினிமா ஓஷிந்தால்தான் இளைய சமுதாயம் உருப்படும்.
Rate this:
Cancel
சத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா
06-ஜூன்-202013:38:24 IST Report Abuse
சத்யமேவ ஜெயதே தமிழகத்திலும், மும்பயிலும் நிரந்தரமாக மூடி விடுங்கள். கூத்தாடிகளின் தொல்லை தாங்க முடியவில்லை. இவனுங்க நடிக்க வந்தார்களா ? இல்லை அரசியல் பேச வந்தார்களா ? இல்லை இந்து மதத்தை அழிக்க வந்தானுங்களா ? கிறிஸ்தவ வெளினாட்டு கூட்டணி வைத்துக் கொண்டு ராஜராஜ சோழன் கட்டிய தரணி பாடும் தஞ்சை கோவிலைப் பற்றியும் கொஞ்சமும் அசராமல் காமெடி பேசுவது போல அந்தம்மா சீரியசாக பேசி விட்டு கூலாக பத்து கோடி பார்த்துவிட்டார். அதனால் இந்தியாவில் சினிமா தியேட்டர்களை மூடுவது நியாயமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X