பொது செய்தி

இந்தியா

படேல் சிலை சுற்றி வேலி அமைக்கும் பணி நிறுத்தம்

Updated : ஜூன் 06, 2020 | Added : ஜூன் 06, 2020
Share
Advertisement
patel statue, sardar Vallabhbhai Patel, Statue Of Unity, மக்கள் எதிர்ப்பு, படேல் சிலை,  வேலி,பணி, நிறுத்தம்

ஆமதாபாத்: குஜராத்தில் படேல் சிலையை சுற்றி வேலி அமைக்கும் பணி மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.

குஜராத்தின் நர்மதா மாவட்டம், நர்மதை ஆற்றின் நடுவில் உள்ள தீவில், சர்தார் சரோவர் அணை அருகில், 597 அடி உயரத்தில், சர்தார் வல்லபாய் படேல் பிரம்மாண்ட சிலையை கடந்த 2018-ம் ஆண்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்த சிலை அமைத்துள்ள நர்மதா மாவட்டம் கேவாடியா கிராமம் அதை சுற்றியுள்ள பகுதிகளை சுற்றி வேலி அமைக்கும் பணியை மாவட்டம் நிர்வாகம் நேற்று துவங்கியது, இதற்கு அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


latest tamil news



கேவாடியா கிராமம் அதன் அருகே உள்ள மேலும் 5 கிராம மக்களிடம் ஆலோசனை கேட்காமல் திடீரென வேலி அமைப்பது தங்களது விவசாய நிலங்கள் அபகரிக்க முயற்சி நடப்பதாக தெரிவித்து வேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து மாவட்ட நிர்வாகம் வேலி அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X