பொது செய்தி

இந்தியா

எல்லை பிரச்சனை: இந்தியா- சீனா பேச்சுவார்த்தை துவக்கம்

Updated : ஜூன் 06, 2020 | Added : ஜூன் 06, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
India, China, military-level, talks, stand-off, ladakh

புதுடில்லி: இந்தியா - சீனா எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க, இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள், இன்று சந்தித்து பேச்சை துவக்கினர்.

லடாக் மற்றும் சிக்கிமில், சீனாவை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளும் வழக்கமான ரோந்து பணிகளின் போது, சீன ராணுவத்தினர் இடையூறு ஏற்படுத்துவதாக, இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.இதை மறுத்துள்ள சீனா, இந்திய ராணுவத்தினர் தான், எல்லை தாண்டி வருவதாக அபாண்டமாக கூறி வருகிறது.இதையடுத்து, இரு நாடுகளும் எல்லையோரம் ராணுவத்தை குவித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


latest tamil news



இந்நிலையில், இந்தியாவின் அழைப்பை ஏற்று, ராணுவ உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்த, சீனா ஒப்புதல் தெரிவித்துள்ளது.அதன்படி, இன்று இந்திய ராணுவத்தின், 14வது படைப் பிரிவின், லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையிலான குழு, சீன ராணுவ உயரதிகாரிகளுடன் பேச்சு துவங்கியது. லடாக்கில், இந்திய எல்லையில், சுஷுல் - மோல்டோ பகுதியில் இந்த பேச்சு நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சில் சுமுக தீர்வு ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
06-ஜூன்-202019:55:43 IST Report Abuse
Ray நமது எல்லையில் உள்ள கிராமங்கள் ஆறு குளம் ஏரி முதலானவற்றுக்கு அந்த பிராந்திய மொழியிலோ அல்லது இந்தியிலோ பெயரிட்டு தேச வரைபடத்தில் சாசனமாக்கப் பட வேண்டும் அங்கே லாண்ட் மார்க் பலவும் சீன அல்லது திபெத்திய மொழியில் இருப்பது உகந்ததல்ல
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
06-ஜூன்-202018:15:23 IST Report Abuse
Endrum Indian சீனாவுக்கும் ஐ எஸ் ஐ எஸ் க்கும் வித்தியாசமே இல்லை ஆட்டையை போட்டு உலகம் பூரா சீனா ஆகிவிட்டால்???உள்ளுக்குள்ளே மறுபடியும் சண்டை ???பிரிவு???அதற்கு முடிவே இல்லை??திபெத்தை ஆட்டை போட்டது??அருணாச்சல பிரதேசத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டையை போடுகிறது???ஏன் நாம் ஒனக்காச்சி எனக்காச்சி என்று பார்த்துட்டு வேண்டியது தான் இது 3ஆம் உலகப்போர் ஆனாலும் ஆகும் இந்த லெவெலில் போனால் ???
Rate this:
Ray - Chennai,இந்தியா
06-ஜூன்-202019:59:13 IST Report Abuse
Rayஆட்டையை போட்டு உலகம் பூரா சீனா ஆகிவிட்டால்???உள்ளுக்குள்ளே மறுபடியும் சண்டை ???பிரிவு???அதற்கு முடிவே இல்லை?? - இது உள்ளூர் நிலவரங்களுக்கும் பொருத்தமாக இருக்கே...
Rate this:
Cancel
Raj - nellai,இந்தியா
06-ஜூன்-202015:22:44 IST Report Abuse
Raj நாற்பது சதுர கிலோ மீட்டர் பரப்பை சீனா பிடித்துள்ளதாக சொல்லப்படுகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X