எல்லை பிரச்சனை: இந்தியா- சீனா பேச்சுவார்த்தை துவக்கம்| India, China top military-level talks today amid stand-off in ladakh | Dinamalar

பொது செய்தி

இந்தியா

எல்லை பிரச்சனை: இந்தியா- சீனா பேச்சுவார்த்தை துவக்கம்

Updated : ஜூன் 06, 2020 | Added : ஜூன் 06, 2020 | கருத்துகள் (4)
Share
India, China, military-level, talks, stand-off, ladakh

புதுடில்லி: இந்தியா - சீனா எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க, இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள், இன்று சந்தித்து பேச்சை துவக்கினர்.

லடாக் மற்றும் சிக்கிமில், சீனாவை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளும் வழக்கமான ரோந்து பணிகளின் போது, சீன ராணுவத்தினர் இடையூறு ஏற்படுத்துவதாக, இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.இதை மறுத்துள்ள சீனா, இந்திய ராணுவத்தினர் தான், எல்லை தாண்டி வருவதாக அபாண்டமாக கூறி வருகிறது.இதையடுத்து, இரு நாடுகளும் எல்லையோரம் ராணுவத்தை குவித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


latest tamil newsஇந்நிலையில், இந்தியாவின் அழைப்பை ஏற்று, ராணுவ உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்த, சீனா ஒப்புதல் தெரிவித்துள்ளது.அதன்படி, இன்று இந்திய ராணுவத்தின், 14வது படைப் பிரிவின், லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையிலான குழு, சீன ராணுவ உயரதிகாரிகளுடன் பேச்சு துவங்கியது. லடாக்கில், இந்திய எல்லையில், சுஷுல் - மோல்டோ பகுதியில் இந்த பேச்சு நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சில் சுமுக தீர்வு ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X