பொது செய்தி

இந்தியா

கொரோனா பாதிப்பு: 6 வது இடத்தில் இந்தியா

Updated : ஜூன் 06, 2020 | Added : ஜூன் 06, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
இந்தியா, கொரோனா, பாதிப்பு, கொரோனாதொற்று, வைரஸ், உலகம், இத்தாலி, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases worldwide, corona crisis, covid 19 pandemic, worldwide crisis, india, worst hit country

புதுடில்லி : உலகளவில் கொரோனா பாதித்த நாடுகள் பட்டியலில், இத்தாலியை பின்னுக்கு தள்ளி இந்தியா 6 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்தியாவில் இன்றைய நிலவரப்படி, புதிதாக 9,887 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 36 ஆயிரத்து 657 ஆக அதிகரித்துள்ளது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 6,642 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில், ஒரே நாளில் அதிகபட்சமாக 9,887 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகளவில், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இத்தாலியை பின்னுக்கு தள்ளி இந்தியா 6வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் பலி எண்ணிக்கையில் 12வது இடத்தில் உள்ளது. புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியவுடன் அவர்களுக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. அதில், அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாவதால், பல மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது.


latest tamil news
இந்த பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் பிரேசிலும், 3வது இடத்தில் ரஷ்யாவும், 4வது இடத்தில் ஸ்பெயினும், 5வது இடத்தில் பிரிட்டனும், 7 வது இடத்தில் இத்தாலியும், 8 வது இடத்தில் பெருவும், 9 வது இடத்தில் ஜெர்மனியும், 10 வது இடத்தில் துருக்கியும் உள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-ஜூன்-202019:32:44 IST Report Abuse
ஆப்பு முதலிடத்தைப் பிடிக்கணும். அப்போதான் அமெரிக்கா மாதிரி வல்லரசாக முடியும்.
Rate this:
Cancel
06-ஜூன்-202019:21:25 IST Report Abuse
ஆப்பு அடுத்த மன் கீ பாத் எப்போ?
Rate this:
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
06-ஜூன்-202018:50:22 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை படேல் சிலைக்கு செலவழித்த பணம் இருந்திருந்தால் எத்தனையோ உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். அநியாயத்திற்கு அந்த பணத்தை சீனாவிற்கு கொடுத்தார்கள்.
Rate this:
06-ஜூன்-202019:50:40 IST Report Abuse
என் மேல கை வெச்சா காலிrajavelu osi briyaanikkum quaterkkum selavu seitha dravida katchikal andha panathai koduthu irundhaal inneram kattu paduthi irukkalaam....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X