பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டி - கோவை இடையே பஸ் சேவை நிறுத்தம்

Updated : ஜூன் 06, 2020 | Added : ஜூன் 06, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
ஊட்டி, கோவை, பஸ், சுற்றுலா, நிறுத்தம், corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, tn corona cases, corona crisis, covid 19 pandemic, tamil nadu

ஊட்டி: பயணிகள் பெயரில் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்ததை தொடர்ந்து ஊட்டி - கோவை இடையிலான பஸ் போக்குவரத்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த இரு மாதங்களாக பஸ், ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் பின்னர் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், அதில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டன. தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. அதில், கோவை மண்டலத்தில் கோவையில் இருந்து ஊட்டிக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த பஸ்களில், பயணிகள் என்ற பெயரில் பல்வேறு காரணங்களை கூறி சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு அதிகளவு வந்துள்ளனர்.


latest tamil news



இது குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து கழகத்தினர். கோவை - ஊட்டி இடையிலான பஸ் போக்குவரத்தை ரத்து செய்துள்ளனர். தொழிலாளர்களை மட்டும் ஏற்றி வருவதற்காக தினமும் காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு ஏழு பஸ்களும், மாலை ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு 3 பஸ்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nalam Virumbi - Chennai,இந்தியா
06-ஜூன்-202020:23:18 IST Report Abuse
Nalam Virumbi இந்த மாதிரி சுயக் கட்டுப்பாடு இல்லாதவர்கள் கொரோனா வந்து அவஸ்தைப் படட்டும்
Rate this:
Cancel
s.rajagopalan - chennai ,இந்தியா
06-ஜூன்-202013:39:52 IST Report Abuse
s.rajagopalan பயணிகளிடமிருந்து தலா ஒரு லட்சம் வசூலிக்க வேண்டும். பணக்கொழுப்பிற்கு இதுதான் தகுந்த தண்டனை. கூடவே 15 நாள் சிறை தண்டனை ...ஸ்பேசல் களி வேண்டுமானால் கொடுக்கலாம் .
Rate this:
Cancel
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
06-ஜூன்-202012:31:59 IST Report Abuse
SAPERE AUDE இது எதிர்பார்த்து தான். வெய்யில் காலம், அலுவலகத்திற்கும் செல்ல முடியாது கோடை வாசஸ்தலங்களுக்கு போக அரசு பஸ் வசதியை அளித்தவுடன், மக்கள் "கொரோனா வை" மறந்து விட்டனர். மலையில் உள்ள ஊட்டி, கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் படைஎடுத்தது எதிர்பார்த்ததுதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X