பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை ராயபுரத்தில் 3,550 பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 06, 2020 | Added : ஜூன் 06, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை, ராயபுரம், கோடம்பாக்கம், கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட் - 19, Covid-19 in Chennai, Royapuram zone, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, TAMIL NADU, chennai, royapuram

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதியில் ராயபுரம் மண்டலத்தில் 3,552 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. குறைவாக ஆலந்தூர் மண்டலத்தில் 314 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தினமும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி வருகிறது. நேற்றும்(ஜூன் 5) 1,116 பேருக்கு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19, 826 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று உயிரிழந்த 12 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள். இதனால். சென்னையில் மட்டும் இதுவரை 178 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி பகுதியில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
இதன்படி, அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 3,552 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தண்டையார்ப்பேட்டை, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களில், முறையே 2470, 2,245,2,202 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. குறைந்தபட்சமாக ஆலந்தூர் மண்டலத்தில் 314 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டது.

கொரோனா பாதிப்பு விவரம்


latest tamil news




latest tamil news




ரூ.10.44 கோடி அபராதம்


ஊரடங்கு காலத்தில் விதிகளை மீறியவர்களிடம் ரூ.10.44 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது 5.48 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 4,50,579 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


23 சிறுவர்களுக்கு கொரோனா


சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் 55 சிறுவர்கள் உள்ளனர். அதில் 23 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டது. இதனையடுத்து காப்பக வளாகத்தை தூய்மை செய்யும் பணியை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. சிறுவர்களுக்கு ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளி்கப்பட்டு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JSS - Nassau,பெர்முடா
06-ஜூன்-202018:52:33 IST Report Abuse
JSS என்னுடைய சிறுவயதில் ராயபுரத்தில்தான் இருந்தேன். மிகவும் அமைதியாக ஒரு சிறிய கடற்கரையுடன் அழகாக இருந்தது. நிறைய நண்பர்கள் தினமும் கடற்கரையோர தடுப்பு சுவற்றில் உட்கார்ந்து மாலை நேரத்தை போக்குவோம். குன்ஹிராமன் கடையில் ஐஸ்கிரீம் சாப்பிடுவது, மாதாகோவில் மைதானத்தில கிரிக்கெட் விளையாடுவது ஆங்கிலேய இந்தியர்களின் ஆங்கிலப்பாடல்கள் என்று இருந்த ராயபுரத்தை கெடுத்த பெருமை கழகங்களையே சாரும். இப்போது covid புறமாகிவிட்டது.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
06-ஜூன்-202013:50:15 IST Report Abuse
blocked user வட சென்னையை சின்னாபின்னமாக்கி விட்டார்கள் படுபாவிகள்...
Rate this:
Cancel
Balakrishnan Kamesh - tiruvarur,இந்தியா
06-ஜூன்-202013:37:40 IST Report Abuse
Balakrishnan Kamesh ராயர் புறம் ராயபுரமாக மருவி தற்பொழுது COVIDபுறமாக மாறிவிட்டது ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X