அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரசாந்த் கிஷோர் ஆபீசுக்கு பூட்டு: தி.மு.க.,வில் திடீர் குழப்பம்

Updated : ஜூன் 08, 2020 | Added : ஜூன் 06, 2020 | கருத்துகள் (49)
Share
Advertisement
சென்னை:தி.மு.க., - ஐ.டி., அணி நிர்வாகிகளுக்கும், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருக்கும் இடையே நிலவும் பனிப்போரால், சென்னை, அண்ணா நகரில் உள்ள, 'ஐபேக்' அலுவலகம் மூடப்பட்டு உள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அடுத்த ஆண்டுக்கான, சட்டசபை தேர்தல் பணிகளுக்கு திட்டமிட, பிரசாந்த் கிஷோர் நிறுவனத்துடன், தி.மு.க., தலைமை ஒப்பந்தம் செய்தது. பிரசாந்த் தலைமையிலான, 'ஐபேக்'
பிரசாந்த் கிஷோர் ஆபீசுக்கு பூட்டு:  தி.மு.க.,வில் திடீர் குழப்பம்

சென்னை:தி.மு.க., - ஐ.டி., அணி நிர்வாகிகளுக்கும், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருக்கும் இடையே நிலவும் பனிப்போரால், சென்னை, அண்ணா நகரில் உள்ள, 'ஐபேக்' அலுவலகம் மூடப்பட்டு உள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஆண்டுக்கான, சட்டசபை தேர்தல் பணிகளுக்கு திட்டமிட, பிரசாந்த் கிஷோர் நிறுவனத்துடன், தி.மு.க., தலைமை ஒப்பந்தம் செய்தது. பிரசாந்த் தலைமையிலான, 'ஐபேக்' நிறுவனத்தின் சார்பில், 234 தொகுதிகளுக்கும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, களப்பணி துவக்கப்பட்டுள்ளது.தி.மு.க.,வின், 'ஒருங்கிணைவோம் வா' செயல் திட்டத்தால், சில மாவட்ட செயலர்கள் மற்றும் அக்கட்சியின் தகவல்தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆகியோருக்கு, பிரசாந்த் மீது கோபம் ஏற்பட்டது.

இது பெரிதாகி, 'ஐபேக்' நிர்வாகிகளுக்கும், ஐ.டி., அணி நிர்வாகிகளுக்கும் இடையேயான மோதலாக வெடித்தது. மேலும், ஐபேக் எடுத்துள்ள, சர்வே விவகாரமும் கோஷ்டி பூசலாக வெடித்துள்ளது.சமீபத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடத்திய, மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், ஐபேக் நிர்வாகிகளின் செயல்பாடுகளை, மாவட்ட செயலர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில், சென்னை, அண்ணா நகரில், எந்த நேரமும் இளைஞர்கள் பட்டாளத்துடன் இயங்கி வந்த, ஐபேக் அலுவலகம், திடீரென மூடப்பட்டுள்ளது.ஐபேக் தரப்பில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தான் மூடப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Covaxin  (திமுக ஒழியும், தாமரை மலரும் பாருங்கடா) அறிவாலயத்தை பூட்டுறவரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணியிருக்கலாமே கிஷோரு... அவசரப்பட்டுட்டேயே...
Rate this:
SARAVANAN G - TRICHY,இந்தியா
09-ஜூன்-202009:18:00 IST Report Abuse
SARAVANAN Gtamilanaattil indru varai NOTA - udan photti podum naamaley KAMALAALAYAM nadatthum podhu Arivaalayam eppadi poottappadum ? .....haa .. haa.......
Rate this:
Cancel
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
08-ஜூன்-202001:22:17 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி நியூ நியூ அன்ணாகாரவுங்கல்லம் ப்ப ஜோஇன் பண்ணிக்கலாம். வயசானவங்கள்லாம் ரெடிரிட்மென்ட் கொடுக்குவாங்க
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
07-ஜூன்-202023:18:31 IST Report Abuse
Chandramoulli Sudalai makkalukku thaan pattai naamam pottar. P.K. group Sudalin kku Bihar halwa koduthu Periya pattai naamam pottu vittu oodi vittar
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X