பொது செய்தி

தமிழ்நாடு

வீடு கட்டுமான செலவு சதுரடிக்கு ரூ.200 உயர்வு

Updated : ஜூன் 07, 2020 | Added : ஜூன் 07, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement

சென்னை; சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில், புதிய வீடுகள் கட்டுவதற்கான கட்டுமான செலவுத் தொகை, சதுர அடிக்கு, 200 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால், வீடு கட்டுவோர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.



latest tamil news



ஊரடங்கால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், கட்டுமான பணிகள், 40 நாட்களுக்கு மேலாக முடங்கின. தற்போது, அரசு வழங்கிய தளர்வுகளால், படிப்படியாக பணிகள் துவக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், சிமென்ட் விலையில் ஏற்பட்டுள்ள உயர்வு, மணல் தட்டுப்பாடு, பணியாளர்கள் பற்றாக்குறை போன்றவற்றால், கட்டுமான செலவு வெகுவாக அதிகரிக்கிறது. ஏற்கனவே, திட்டமிட்ட தொகைக்குள் கட்டுமான பணிகளை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 5,000 சிறிய அளவிலான குடியிருப்பு திட்டங்களும், 500க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான திட்டங்களும் முடங்கிஉள்ளன. இவற்றில், 200 திட்டங்களில் மட்டுமே, பணிகள் துவங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

இது குறித்து, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தின் மாநில பொருளாளர், எஸ்.ராமபிரபு கூறியதாவது:சென்னை மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில், 1 சதுர அடிக்கான குறைந்தபட்ச கட்டுமான செலவு, 1,800 ரூபாயாக மதிப்பிடப்பட்டு வந்தது. கூடுதல் வசதிகள் அடிப்படையில் அடுக்கு மாடி திட்டங்களில், இத்தொகை வேறுபடும்.இந்நிலையில், சிமென்ட், பணியாளர்கள் பற்றாக்குறை, கொரோனா தடுப்புக்கான கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக, செலவு அதிகரித்துள்ளது.


latest tamil news



இதனால், சதுரடிக்கு, 200 ரூபாய் வரை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.செலவு திடீரென உயர்ந்ததால், கட்டுமான நிறுவனங்கள் மட்டுமல்லாது, வீடு வாங்குவோர், தனி வீடு கட்டுவோரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அரசு தலையிட்டு, சிமென்ட் விலையை கட்டுப்படுத்தினால் மட்டுமே, இதில் தீர்வு ஏற்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.viswanathan - chennai,இந்தியா
07-ஜூன்-202022:12:47 IST Report Abuse
m.viswanathan இந்த நாடு திருந்துவது மிகவும் கஷ்டம் , பேராசை, பேராசை ,,பேராசை , பதவி ஆசை , மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பது அல்வா சாப்பிடுவது போல்
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
07-ஜூன்-202012:34:08 IST Report Abuse
Rafi மக்களிடம் பணமில்லை, ஆனால் அரசே பல வடிவங்களில் விலை உயர வழிவகுக்கின்றார்கள். விளைவு அணைத்து தொழில்களும் முடங்கவே வாய்ப்புகள் அதிகம்.
Rate this:
Cancel
SIVA G india - chennai,இந்தியா
07-ஜூன்-202009:11:47 IST Report Abuse
SIVA G  india புதிய வீட்டு கடன் அல்லது விஸ்தரிப்புகளுக்கு கடனும் EMI யும் அதிகமாகும்.இதில் பள்ளி நிர்வாகம், வங்கிகளில் கடன் வங்கி கட்டணத்தை கட்டி விட்டு மாதா மாதம் EMI கட்டிகொள்ள சொல்கிறார்கள்.இதற்கு ஸ்டாலின் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு,எல்லா கல்வி நிறுவனங்களுக்கும் கடிதம் எழுதலாமே. மக்கள் மாதா மாதம் சம்பளம் வாங்குவதால் இனி கொரானா காலம் முடியும் வரை மாத மாதம் கட்டணம் வாங்கி கொள்ளுங்கள்.ஏன் மொத்தமாக கட்டணம் வாங்கி மேலும் கடன்காரர்கள் ஆக்க வேண்டாம். மக்கள் உங்களிடம் கடனையா வாங்கி கொண்டு ஓடிவிட போகிறார்கள் என எல்லா கல்வி நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பி பின் இன்றய அறிக்கையாக இதை வெளியிடுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X