பொது செய்தி

தமிழ்நாடு

மே மாதம் 32.50 கோடி லிட்டர் டீசல் விற்பனை

Updated : ஜூன் 07, 2020 | Added : ஜூன் 07, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Petrol, diesel, May, பெட்ரோல், டீசல், மே,  Petrol Dealers Association, VAT on petroleum products,  Value Added Tax, lockdown restrictions,lockdown, travel ban, coronavirus, covid-19, corona outbreak

சென்னை : தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு இல்லாத பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் பங்க்குகளில் மே மாதம் 32.50 கோடி லிட்டர் டீசல்; 22 கோடி லிட்டர் பெட்ரோல் விற்பனையாகியுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் 25 முதல் நாடு முழுதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் பெட்ரோல் டீசல் சமையல் காஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்கள் அத்தியாவசிய சேவையின் கீழ் வருவதால் அவற்றை வினியோகிக்க அரசு அனுமதி வழங்கியது.

ஏப்ரலில் காலை முதல் பகல் வரை மட்டுமே பெட்ரோல் பங்க்குகள் செயல்பட அனுமதிக்கப்பட்டது. அரசு வாகனங்கள்மருத்துவ வாகனங்கள் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் வாகனங்கள் சென்றன. இதனால் ஏப்ரலில் 12.30 கோடி லிட்டர்பெட்ரோல்; 14.34 கோடி லிட்டர் டீசல் விற்பனையாகின. மார்ச் மாதம் அவற்றின் விற்பனை முறையே 26.40 கோடி லிட்டர்; 38.90 கோடி லிட்டர் என்றளவில் இருந்தன.


latest tamil newsமே மாதம் ஊரடங்கு தொடர்ந்தாலும் வைரஸ் பாதிப்பு இல்லாத பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இருப்பினும் பொது போக்குவரத்து துவங்கப்படாத நிலையில் பலரும் சொந்த வாகனங்களில் வேலைக்கு சென்றனர்.மே மாதத்தில் 22 கோடி லிட்டர் பெட்ரோல்; 32.50 கோடி லிட்டர் டீசல் விற்பனை ஆகியுள்ளன. கடந்த 2019 மே மாதம் 31.60 கோடி லிட்டர் பெட்ரோல்; 53.10 கோடி லிட்டர் டீசல் விற்பனையாகின.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-ஜூன்-202007:20:38 IST Report Abuse
ஆப்பு இந்திய மக்கள் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாங்க. எவ்ளோ விலை வெச்சாலும் வாங்குவாங்க.
Rate this:
Cancel
07-ஜூன்-202006:57:14 IST Report Abuse
தமிழ் இதில் மக்களிடம் மறைமுகமாக கொள்ளையடித்த பணம் எவ்வளவு என்று சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.இதற்கெல்லாம் அல்லக்கைகளும் சொம்புகளும் கொத்தடிமைகளும் எதுவுமே சொல்லாமல் அவர்கள் தலைவனைப் போல மௌன சாமியாராகி விடுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X