தேவஸ்தானம் மீது அவதூறு பேச்சு; நடிகர் சிவகுமார் மீது வழக்கு

Updated : ஜூன் 07, 2020 | Added : ஜூன் 07, 2020 | கருத்துகள் (151) | |
Advertisement
திருப்பதி : திருமலை திருப்பதி தேவஸ்தானத்தை, அவதுாறாக பேசியது தொடர்பாக, நடிகர் சிவகுமார் மீது, திருமலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.திருமலை திருப்பதி தேவஸ்தானம், திருமலை இரண்டாவது காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளது. அந்த புகார் மனு விபரம்: தேவஸ்தானத்தை விமர்சிக்கும் வகையில், சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாவதால், பக்தர்கள் மன வேதனை அடைகின்றனர்.
tirupati, siva kumar, tirupati devasthanam, police, TTD, Tirupati police, defamation, actor sivakumar, Thirumalai Tirupathi Devasthanam, Tirupati Ezumalayan temple, திருமலை திருப்பதி தேவஸ்தானம், சிவக்குமார், வழக்கு

திருப்பதி : திருமலை திருப்பதி தேவஸ்தானத்தை, அவதுாறாக பேசியது தொடர்பாக, நடிகர் சிவகுமார் மீது, திருமலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம், திருமலை இரண்டாவது காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளது. அந்த புகார் மனு விபரம்: தேவஸ்தானத்தை விமர்சிக்கும் வகையில், சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாவதால், பக்தர்கள் மன வேதனை அடைகின்றனர். எனவே, பக்தர்கள் மன வேதனைப்படும் வகையில், ஏழுமலையான் குறித்தும், தேவஸ்தானம் குறித்தும், அவதுாறாக பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news


இதையடுத்து, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் உறுப்பினரான, சுதா நாராயணமூர்த்தி, தன் பதவியை ராஜினாமா செய்ததாக, முகநுாலில் தவறான செய்தி வெளியிட்ட நபர்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில், 'திருமலையில் மறைமுகமாக பல காரியங்கள் நடந்து வருகின்றன.அதனால், பக்தர்கள் திருமலைக்கு செல்ல வேண்டாம்' என, ஒரு வீடியோ பதிவு வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இதுபற்றி, தமிழ்மாயன் என்றவர், தேவஸ்தானத்திற்கு மின்னஞ்சல் வழியாக புகார் அளித்தார். அதனடிப்படையில், தேவஸ்தானம் புகார் அளித்ததால், நடிகர் சிவகுமார் மீதும், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுமட்டுமின்றி, 'ஜூன், 30 வரை பக்தர்களுக்கு, திருமலையில் தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது' என, சமூக வளைதளங்களில், மூன்று பேர் தவறான செய்தி வெளியிட்டனர்.


latest tamil newsமேலும், 'திருமலை இதற்கு முன், புத்த விகாரமாக இருந்தது. தலைமுடி காணிக்கை என்பது, ஹிந்துக்களின் வழக்கம் அல்ல; பவுத்தர்கள் பழக்கம். 'திருமலையில் இருந்த புத்தர் சிலையை எடுத்து விட்டு, ஏழுமலையான் சிலை நிறுவப்பட்டுள்ளது' முகநுால் பக்கத்தில், மே, 7ல், ஒருவர் பதிவிட்டிருந்தார்.

இவை அனைத்தும், தேவஸ்தானத்தின் மீது, அவதுாறு பரப்ப சித்தரிக்கப்பட்டவை. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும், காவல் நிலையத்தில், தேவஸ்தானம் புகார் அளித்துள்ளது. அதனால், தவறான தகவல்கள் பரப்பிய அனைவர் மீதும், திருமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (151)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Charles - Burnaby,கனடா
13-ஜூன்-202023:45:15 IST Report Abuse
Charles என்னுடைய எண்ணத்தில், திருப்பதி தேவஸ்தானம் ஒரு அரசியல் அமைப்பு, அதில் இருக்கும் நிர்வாகத்தினர் மக்களால் தேர்ந்துஎடுக்க படவேண்டும், அதன் கண்ணுக்குள் பத்திரிக்கைகளில் வெளியிடப்பட வேண்டும். இல்லை என்றல் எதை வேணாலும் செய்யலாம் அதை மறைக்கவும் செய்யலாம்
Rate this:
Cancel
13-ஜூன்-202021:06:41 IST Report Abuse
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு சிவகுமார் தனது தரம் குறைந்த பேச்சால் .....,
Rate this:
Cancel
Padmanaban Jayakrishnan - singapore,சிங்கப்பூர்
12-ஜூன்-202011:39:56 IST Report Abuse
Padmanaban Jayakrishnan இதையே தான் திருப்பதி கோயில் அர்ச்சகர் டிவி பேட்டியில் சொன்னார் ....அப்போ யாரும் வாய் திறக்கவில்லை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X