கோர்ட் செய்தி

தமிழ்நாடு

8 வழிச் சாலைத் திட்டம் கைவிட ஸ்டாலின் கோரிக்கை

Updated : ஜூன் 07, 2020 | Added : ஜூன் 07, 2020 | கருத்துகள் (51)
Share
Advertisement
DMK, MK Stalin, Stalin, திமுக, ஸ்டாலின், அறிக்கை,  central governments, state governments, DMK, politics, road project

சென்னை: 'சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டத்தை, மத்திய, மாநில அரசுகள் உடனே கைவிட வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டில், தீர்ப்பு வருவதற்கு முன், சேலம் எட்டு வழிச்சாலை பணிகள் நடைபெறும் என, சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணன்கூறியிருப்பது, அகங்காரத்தின் வெளிப்பாடாக இருக்கிறது. விவசாயி என்ற, புதிய அவதாரம் எடுத்திருக்கும் முதல்வர், இ.பி.எஸ்., இலவச மின்சாரத்தை ரத்து செய்யும், பா.ஜ.,வுடன் கூட்டுச் சேர்ந்து, இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அவசரப்படுகிறார்.


latest tamil news



தான் போட்ட, விவசாயி வேடத்தை, மேல்முறையீடு வாயிலாக கலைத்து விட்டு, மக்கள் விரோத திட்டத்தை நிறைவேற்ற, இ.பி.எஸ்., அவசரப்படுகிறார்; ஆத்திரப்படுகிறார். விவசாயிகளின் முதுகெலும்பை முறித்து, சேலம் எட்டுவழி பசுமைச் சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவதை, மத்திய, மாநில அரசுகள் உடனே கைவிட வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
07-ஜூன்-202020:48:34 IST Report Abuse
தமிழ்வேள் எட்டு வழி சாலை திட்டம் தவறல்ல ..ஆனால் குறிப்பாக நன்செய் நிலங்கள் நீராதாரங்களை மட்டுமே குறிவைத்து அழிக்கும் செயல்தான் கண்டனத்துக்குள்ளாகிறது ....தற்போது சேலம் சென்னைக்கு மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் இருக்கும்போது நான்காவது சாலைக்கு என்ன தேவை ? தற்போதைய ரயில் தடத்தின் அருகிலேயே மேலும் நான்கு ரயில் பாதை அமைக்கும் அளவுக்கு இடம் இருக்கும்போது எதற்கு தனியாக சாலை ? அந்த சாலை செல்லும் வழி முழுக்க நிறைந்து கிடைக்கும் கனிமவளம் முழுதும் சுரண்டப்பட்ட போட்ட திட்டம் போல உள்ளது .........வைகுண்டராஜன் போல இவர்களும் சம்பாதிக்க வழி தேடுகிறார்கள் போல ? இந்த் சாலைக்கான ஒட்டுமொத்த காண்டிராக்டும் ஒரே கம்பெனி குடும்பத்துக்கு கொடுக்கப்பட்டதும் ஐயத்தை கூட்டுகிறது ......
Rate this:
Cancel
Rajan - Alloliya,இந்தியா
07-ஜூன்-202016:55:44 IST Report Abuse
Rajan சூசை ஷோக்கா கீறார் பா
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
07-ஜூன்-202016:35:07 IST Report Abuse
skv srinivasankrishnaveni குர்ஸி மீது மட்டுமே கவனம் இந்தாளுக்கு ஆனால் மக்கள் இந்தாளை நம்பவே தயாரா இல்லீங்களே எப்போது கட்ச்சிக்கும் தானே கட்ச்சித்துட்டுக்கும் தானே பொறுப்பு மத்தவா எல்லாம் முகவிற்கு வாரிசு இல்லே யாரொபெத்தபிள்ளைகள் தானும் கனிமொழியும்தான் பொறுப்பு போனால்போட்டு துரையப்பான் கூட இருக்கலாம் என்று இருக்காங்க அம்புட்டுதான் தயாளு அம்மா எங்கேயிருக்காரு தெரியுமா ?யாருக்கும் கோபாலபுரமா இல்லே மதுரைஐயா ஒன்னும் தெரியவேயில்லீங்க ராசாத்தி எங்கே போனாக gok
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X