பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டும்: சத்குரு

Updated : ஜூன் 07, 2020 | Added : ஜூன் 07, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
Isha, Sadhguru, Isha Yoga, Ravichandran Ashwin, Indian cricketer, coronavirus, farming, agriculture, Cauvery, சத்குரு, அஷ்வின்

சென்னை: ''படித்தவர்கள் அனைவரும், தங்களின் பிள்ளைகளை விவசாயத்தில் ஈடுபடுத்தினால், அத்தொழில் லாபகரமானதாகும்,'' என, கிரிக்கெட் வீரர் அஸ்வினுடன் நடந்த கலந்துரையாடலில், சத்குரு தெரிவித்தார்.

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவுடன், பல்வேறு துறையினர் உரையாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர், ரவிச்சந்திரன் அஸ்வின், நேற்று, 'ஆன்-லைன்' வழியாக கலந்துரையாடினார். இதில், கிரிக்கெட், விளையாட்டு சார்ந்த கேள்விகள், விவசாயிகள் தற்கொலை, கொரோனாவுக்கு பின் மக்களின் வாழ்க்கை முறை, காவிரி கூக்குரல் இயக்க செயல்பாடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து, கேள்வி எழுப்பினார்.


latest tamil news


அவற்றுக்கு பதிலளித்த, சத்குரு பேசியதாவது: விவசாயிகள், 2 சதவீதம் பேர் மட்டுமே, தங்களின் பிள்ளைகளை விவசாயத்தில் ஈடுபடுத்த விரும்புகின்றனர். விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற, படித்தவர்கள் அனைவரும், தங்களின் குழந்தைகளை விவசாயத்தில் ஈடுபடுத்த வேண்டும்.

மண்ணை உணவாக மாற்றுவது, சாதாரண விஷயம் கிடையாது. இந்தியாவில் உள்ள, 140 கோடி மக்களுக்கும் உணவளிப்பது விவசாயிகள் தான். உலகிற்கு தேவையான, அனைத்து விளை பொருட்களையும், இங்கு விளைவிக்க முடியும். நாட்டின், 65 சதவீத விவசாய மக்கள் தொகையை சிறப்பாக பயன்படுத்தினால், உலகிற்கே நம்மால் உணவு அளிக்க முடியும். எனவே, விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனு, கூடுவாஞ்சேரி விவசாயம் செத்துவிட்டது என்பது உண்மையாக இருந்தால் நமக்கு இப்போது உணவு எப்படி கிடைக்கிறது. எல்லாம் வெளி நாட்டில் இருந்து இறக்குமதியா. புரியவில்லை
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
07-ஜூன்-202016:39:05 IST Report Abuse
skv srinivasankrishnaveni ஐயா விவசாயம் எங்கேயிருக்கு சொல்லுங்க பிள்ளைகளிடமும் அரிசி எங்கே கிர்=டைக்கும்னுகேளுங்க பதில்வரும் சூப்பேர்மமார்க்கெட் லே என்றும் நாடார்கடயில் /செட்டி யார்கதைளே கிடைக்கும் என்று பதில்வரும் ஏழைகளென்றால் ரேஷன்கடையே என்று சொல்லுங்க இப்போது மந்திரிகள் பொலப்பாளரும் தரங்க என்றும் கூட சொல்லுவாங்க
Rate this:
Cancel
Isitnotso - Chennai,இந்தியா
07-ஜூன்-202016:31:35 IST Report Abuse
Isitnotso கல்வி வியாபாரம், மருத்துவம் வியாபாரம், யோகா வியாபாரம், ஆன்மிகம் வியாபாரம், அரசியல் வியாபாரம், பாவம் விவசாயீ, இப்போ அதையும் லாபகரமான வியாபாரம் ஆக்கணுமா, விவசாயமும் விவசாயியும் நன்றாக இருக்க வேண்டும் அதில் மாற்று கருத்து இல்லை. எனினும் இந்த சேவை என்று ஒன்று இருந்ததே அது எங்கே போச்சு ? மருத்துவ சேவை, கல்வி சேவை அப்புடின்னு சொல்லுவாங்களே அதெல்லாம் எங்கே போனது ?எல்லாமே வியாபாரமா மாத்திட்டா அப்போ நாட்டையும் வியாபார சந்தையா மாறிவிடாதா ? அல்லது ஏற்கனவே அப்படி மாறிவிட்டதா ? நமது பாரம்பரியம் என்னாவது ? நீங்கள் சொல்வது அனைத்தையும் ஏற்க இயலாது மாற்று கருத்துத்க்கும் மதிப்பளிக்க கற்று கொள்ள வேண்டும். நல்ல மனமும் குணமும். மனதில், எண்ணத்தில் இருந்தால்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X