எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா எதிரொலி; சொகுசு விடுதிகளில் அடைத்து வைப்பு

Updated : ஜூன் 07, 2020 | Added : ஜூன் 07, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
Gujarat, Congress, MLAs, resorts, RS polls, Ambaji, Rajkot, Vadodara,  Covid-19 outbreak, restrictions, Gujarat congress MLA, resignation, Rajya Sabha polls, குஜராத், காங்கிரஸ், ரிசார்ட், ராஜ்யசபா தேர்தல், சொகுசு விடுதி

ஆமதாபாத் : குஜராத்தில், வரும் 19ல் ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்., கட்சியின் மூன்று எம்.எல்.ஏ.,க்கள், அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இதனால் கலக்கமடைந்த கட்சி மேலிடம், மீதமுள்ள எம்.எல்.ஏ., க்களை, சொகுசுவிடுதிகளில் தங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

குஜராத் மாநிலத்தின் எதிர்க்கட்சியான, காங்., - எம்.எல்.ஏ.,க்கள் ஐந்து பேர், கடந்த மார்ச்சில் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.அடுத்ததாக, இந்த மாதம், 3ல், அக்ஷய் படேல், ஜிது சவுத்ரியும், நேற்று முன்தினம் பிரிஜேஷ் மெர்ஜாவும் தங்கள்,எம்.எல்.ஏ.,பதவிகளை ராஜினாமா செய்தனர். இதையடுத்து, ராஜினாமா செய்த காங்., - எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை, எட்டாக உயர்ந்துள்ளது.


latest tamil news


இந்நிலையில், இம்மாநிலத்தில், ராஜ்யசபா தேர்தல், வரும், 19ல் நடைபெற உள்ளது. இதில் இரண்டு எம்.பி.,க்களைப் பெற, காங்., கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மீதமுள்ள, 65 எம்.எல்.ஏ.,க்களையும், 'ரிசார்ட்' மற்றும் சொகுசு பங்களாக்களில் தங்க வைக்க, கட்சியின் மேலிடம் முடிவு செய்தது.

இதுகுறித்து, மாநில காங்., செய்தி தொடர்பாளர் மணீஷ் தோஷி கூறியதாவது:காங்.,- எம்.எல்.ஏ.,க்கள் வேட்டையாடப்படுவதை தடுக்க, கட்சியின் மேலிடம் தீர்மானித்துள்ளது. இதையடுத்து, அவர்கள் ரிசார்ட்டிலும், தனியார் பங்களாக்களிலும், தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நடைபெறும் ஜூன், 19 வரை, எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், இங்கேயே தங்கியிருப்பார்கள். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
10-ஜூன்-202011:57:36 IST Report Abuse
skv srinivasankrishnaveni தலைமைக்கு கூட்டாணி திமிக்கவாச்சே
Rate this:
Cancel
adalarasan - chennai,இந்தியா
07-ஜூன்-202020:34:56 IST Report Abuse
adalarasan கட்சி அச்சாம்பலை உறுப்பினர்களை பிணைக்கைதிகளைப்போல் நடத்தும் இந்த அரசியல் ,காட்சிகளை என்ன என்று செய்வது கேவலமான வாழ்க்கை இவர்களுக்கு…?
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
07-ஜூன்-202018:00:45 IST Report Abuse
Endrum Indian எங்கே போயிருக்காங்க ராஜஸ்தானுக்கு அப்போ எல்லோரும் இப்படி போனா கொரோனா வராதா என்ன????பாத்து சூதனமாக சோசியல் டிஸ்டன்சிங் மெயின்டைன் பண்ணனும் எம் எல் ஏக்களே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X