இந்திய 'ட்ரோன்' சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாக்., மீண்டும் 'கப்சா'

Updated : ஜூன் 07, 2020 | Added : ஜூன் 07, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
Pakistan, India, Indian spy drone, Pakistan Army, spy drone, Line of Control, Loc,  Khanjar Sector, Director-General Inter-Services Public Relations, ISPR, Major General Babar Iftikhar, IAF, Indian air force, இந்தியா, பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: 'எல்லைக் கட்டுப்பாடு கோட்டை கடந்து, பாக்., பகுதிக்குள் ஊருவிய, இந்தியாவின் 'ட்ரோன்'ஐ சுட்டு வீழ்த்தியதாக' மீண்டும் பாகிஸ்தான் 'ரீல்' விட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு, கடந்த ஆண்டு, பிப்ரவரி, 14ல் நடத்திய தற்கொலை படை தாக்குதலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த, 40 வீரர்கள் இறந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் பகுதிக்குள் சென்ற நம் விமானப்படை விமானங்கள், பயங்கரவாத பயிற்சி முகாம்களை குண்டுகள் வீசி அழித்தன.


latest tamil newsஇந்திய விமானப்படை விமானி, 'விங் கமாண்டர்' அபிநந்தனை, பாகிஸ்தான் ராணுவம் சிறை பிடித்தது. இந்தியா கொடுத்த நெருக்கடிக்குப் பயந்து, பாக்., அரசு அபினந்தனை, இரண்டு நாட்களில் விடுவித்தது. அது முதல், இந்திய - பாக்., எல்லையில் பதற்றம் தொடர்கிறது. எல்லைக் கட்டுபாடு கோடு பகுதியில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாக்., ராணுவம் தாக்குதல் நடத்துவதும், இந்திய ராணுவம் விரட்டியடிப்பதும், அடிக்கடி நடக்கும் சம்பவமாகிவிட்டது.


latest tamil news


இந்நிலையில், எல்லை தாண்டி கன்ஜார் பகுதிக்குள் நுழைந்து உளவு பார்த்த இந்தியாவின் 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாக். தெரிவித்துள்ளது. மேலும் இது இந்த ஆண்டு சுட்டு வீழ்த்தப்பட்ட 8வது ட்ரோன் எனவும் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் இதேபோல இரு முறை எல்லை தாண்டி வந்த இந்தியாவின் குட்டி விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக, பாக். கூறியது. ஆனால் அதை இந்தியா மறுத்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
10-ஜூன்-202012:01:14 IST Report Abuse
skv srinivasankrishnaveni எல்லா பாகிஸ்தானிகளும் அவர்கள் வாய்திறந்தால்மூட்டைகளை கொட்டும்பொய்களே
Rate this:
Cancel
Raj - nellai,இந்தியா
07-ஜூன்-202014:38:05 IST Report Abuse
Raj சர்ஜிக்கல் அட்டாகின் ஒரு புகைப்படமும் இதுவரை பொது மக்கள் பார்வைக்கு கிடைக்க வில்லை. தாக்குதல் உண்மைதானா ஆட்சியாளர்களே ?
Rate this:
Cancel
07-ஜூன்-202013:31:51 IST Report Abuse
நக்கல் அடுத்து இந்தியா கொசு பாக்கிஸ்தான் வந்தது நாங்கள் அதை மட்டையால் அடித்து என்று சொல்லி பெருமை கொள்வார்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X