பொது செய்தி

தமிழ்நாடு

34 நாட்களுக்குப்பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

Updated : ஜூன் 07, 2020 | Added : ஜூன் 07, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
Fuel, petrol price, diesel price, chennai, TN fuel price, TN news, Indian oil corporation, retail price, india, petrol, diesel, Tamil Nadu, பெட்ரோல், டீசல், சென்னை, விலை, லிட்டர்

சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 07), 34 நாட்களுக்குப்பின் விலை உயர்ந்து, பெட்ரோல் லிட்டருக்கு 75.54 ரூபாய், டீசல் விலை, லிட்டருக்கு 68.22 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வருவாயை பெருக்குவதற்காக, பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்தி, தமிழக அரசு, அரசாணை பிறப்பித்தது. இதன்படி, பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரி, 28லிருந்து, 34 சதவீதமாகவும், டீசல் மீதான வரி, 20லிருந்து, 25 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது. அதனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு, 3.26 ரூபாயும், டீசல் விலை, 2.51 ரூபாயும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு, மே 4 முதல் அமலுக்கு வந்தது.


latest tamil news


இந்நிலையில், கடந்த 34 நாட்களாக சென்னையில் ஒரே விலையில் நீடித்த பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்ந்தது. பெட்ரோல் 53 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு 75.54 ரூபாயாகவும், டீசல் 52 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு 68.22 ரூபாயாகவும் உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
babu -  ( Posted via: Dinamalar Android App )
07-ஜூன்-202016:35:39 IST Report Abuse
babu பெட்ரோல் விலை உயர்விற்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை. விலைவாசி உயர்விற்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை. நாங்கள் வாங்கும் தேர்தல் நிதிக்கும் விலைவாசி உயர்விற்கும் சம்பந்தமில்லை. ஆனா ஆட்சி நடத்துவது நாங்கதானுங்க, அதற்கும் சம்பளமும்(மற்றதும்) வாங்குவதும் நாங்க தானுங்க, சாதனை பட்டியல் வாசிப்பதும் நாங்கதானுங்க-
Rate this:
Cancel
Raj - nellai,இந்தியா
07-ஜூன்-202014:00:34 IST Report Abuse
Raj குறைப்பதுக்கு பதிலாக கூடுகிறது என்ன அநியாயம்
Rate this:
Cancel
07-ஜூன்-202011:51:52 IST Report Abuse
subramanian vairavan ippo enna sir idharku avasiyam?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X