பிரச்னைகளுக்கு தீர்வு கூறாத டிரம்ப்: பிடன்

Updated : ஜூன் 07, 2020 | Added : ஜூன் 07, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்கத் துணை ஜனாதிபதியும், ஜனநாயக கட்சியில் அதிபர் தேர்தல் வேட்பாளரான, ஜோ பிடனுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கும் ஜார்ஜ் புளாயிட் படுகொலை சம்பவத்தை அடுத்து கருத்து மோதல் அதிகரித்து வருகிறது.பிடன் தற்போது அமெரிக்காவின் பல மாகாணங்களுக்குச் சென்று பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றி வருகிறார். டோவர் பகுதியில் உள்ள டெல்வர் ஸ்டேட்
Donald Trump, Trump, டிரம்ப்,டோனால்ட் டிரம்ப், ஜோ பிடன், பிடன், ஜார்ஜ் பிளாய்டு, அமெரிக்கா, வேலைவாய்ப்பு, Vice President Joe Biden,   President Donald Trump, US president, America, George Floyd death, coronavirus, corona crisis, covid-19 pandemic

வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்கத் துணை ஜனாதிபதியும், ஜனநாயக கட்சியில் அதிபர் தேர்தல் வேட்பாளரான, ஜோ பிடனுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கும் ஜார்ஜ் புளாயிட் படுகொலை சம்பவத்தை அடுத்து கருத்து மோதல் அதிகரித்து வருகிறது.

பிடன் தற்போது அமெரிக்காவின் பல மாகாணங்களுக்குச் சென்று பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றி வருகிறார். டோவர் பகுதியில் உள்ள டெல்வர் ஸ்டேட் பல்கலையில் பிடேன் பேசியதாவது: ஜார்ஜின் கடைசி நிமிடங்களில் அவர் 'என்னால் மூச்சு விட முடியவில்லை…' என கதறியது உலகம் முழுக்க பெரும் தாக்கதை ஏற்படுத்தி உள்ளது. இதனை நடக்காத விஷயம் போல டிரம்ப் பேசுகிறார்.


latest tamil news


அமெரிக்காவில் கொரோனா பாதிப்பையும் தாண்டி வேலைவாய்ப்பு சதவீதம் அதிகரித்துள்ளது என டிரம்ப் மார்தட்டி வருகிறார். கடந்த ஏப்., மே மாதங்களில் 27 சதவீத வேலை வாய்ப்புகள் குறைந்துவிட்டன. இளம் கருப்பின அமெரிக்கர்களுக்கு இருந்த வேலையும் பறிபோயுள்ளது. ஆனால், டிரம்ப் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக நாடகமாடுகிறார். வெள்ளையர்கள் வேலை இழப்பு சதவீதம் 12.4 சதவீதம் இருக்கும் நிலையில் கருப்பர்களது வேலை இழப்பு சதவீதம் 16.8 ஆக உள்ளது. இது மிகவும் ஆபத்தான போக்கு. நிலைமை இவ்வாறு இருக்க, டிரம்ப்போ, 'மிஷன் அகம்ப்லிஷ்ட்' (முயற்சி நிறைவேறிவிட்டது) எனக் கூறும் வகையில் பேசி வருகிறார். இவ்வாறு பிடன் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-ஜூன்-202014:42:44 IST Report Abuse
தமிழவேல் தொற்றுதான் கட்டுச் சோத்துக்குள் இருக்குன்னு சொல்லிகிட்டே இருக்கானுவொலே.. அப்புறமா எப்புடி ஜனங்க ஒத்துழைப்பு இருக்கும் ?
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
07-ஜூன்-202014:08:26 IST Report Abuse
Ramesh Sargam என்ன ஜோ பிடன் சார், டிரம்ப் ஏ ஒரு பெரிய பிரச்சினை. அப்படி இருக்கும்போது, அவர் எப்படி நாட்டில் நடக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கூறமுடியும். கொஞ்சம் யோசியுங்கள்
Rate this:
Cancel
07-ஜூன்-202013:25:23 IST Report Abuse
நக்கல் பிரச்சனைகளுக்கு தீர்வு இருக்கட்டும், பிரச்சனை என்ன?? கொரோனாவா அ கருப்பினத்தவரின் கொலையா... இரண்டும் விவாதிக்கப்படும்... கடந்த வெள்ளிக் கிழமையன்று வாராவாரம் வரும் வேலை வாய்ப்பு அறிக்கை வெளிடப்பட்டது... அது வருவதற்கு முன்பு லிபரல் ஊடகங்கள், அறிக்கை இரண்டாம் உலகப்போர் நிலையைவிட மோசமாக இருக்கும் என்று எழுதின, அப்படி வந்தால், டரம்பை போட்டு தாக்கலாம் என்று காத்திருந்தனர்.. ஆனால், வந்த அறிக்கையோ 25 லட்சம் பேருக்கு புதிதாக வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்று.. இதனால் அங்கு பங்கு சந்தை 900 புள்ளிகள் உயர்ந்தது... ஊடகங்கள் கப்சிப்... அமெரிக்காவை பொறுத்தவரை டிரம்ப் சரியாகத்தான் செய்து கொண்டிருக்கிறார்... இது அங்கு இருக்கும் பலருக்கு தெரியும்... அவர் மீண்டும் வெற்றி பெற்று வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்பது என் கருத்து... அதுதான் இந்தியாவுக்கும் நல்லது... சீனா நசுக்க படவேண்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X