பிரச்னைகளுக்கு தீர்வு கூறாத டிரம்ப்: பிடன்| Joe Biden hits out at Trump | Dinamalar

பிரச்னைகளுக்கு தீர்வு கூறாத டிரம்ப்: பிடன்

Updated : ஜூன் 07, 2020 | Added : ஜூன் 07, 2020 | கருத்துகள் (6)
Share
Donald Trump, Trump, டிரம்ப்,டோனால்ட் டிரம்ப், ஜோ பிடன், பிடன், ஜார்ஜ் பிளாய்டு, அமெரிக்கா, வேலைவாய்ப்பு, Vice President Joe Biden,   President Donald Trump, US president, America, George Floyd death, coronavirus, corona crisis, covid-19 pandemic

வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்கத் துணை ஜனாதிபதியும், ஜனநாயக கட்சியில் அதிபர் தேர்தல் வேட்பாளரான, ஜோ பிடனுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கும் ஜார்ஜ் புளாயிட் படுகொலை சம்பவத்தை அடுத்து கருத்து மோதல் அதிகரித்து வருகிறது.

பிடன் தற்போது அமெரிக்காவின் பல மாகாணங்களுக்குச் சென்று பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றி வருகிறார். டோவர் பகுதியில் உள்ள டெல்வர் ஸ்டேட் பல்கலையில் பிடேன் பேசியதாவது: ஜார்ஜின் கடைசி நிமிடங்களில் அவர் 'என்னால் மூச்சு விட முடியவில்லை…' என கதறியது உலகம் முழுக்க பெரும் தாக்கதை ஏற்படுத்தி உள்ளது. இதனை நடக்காத விஷயம் போல டிரம்ப் பேசுகிறார்.


latest tamil news


அமெரிக்காவில் கொரோனா பாதிப்பையும் தாண்டி வேலைவாய்ப்பு சதவீதம் அதிகரித்துள்ளது என டிரம்ப் மார்தட்டி வருகிறார். கடந்த ஏப்., மே மாதங்களில் 27 சதவீத வேலை வாய்ப்புகள் குறைந்துவிட்டன. இளம் கருப்பின அமெரிக்கர்களுக்கு இருந்த வேலையும் பறிபோயுள்ளது. ஆனால், டிரம்ப் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக நாடகமாடுகிறார். வெள்ளையர்கள் வேலை இழப்பு சதவீதம் 12.4 சதவீதம் இருக்கும் நிலையில் கருப்பர்களது வேலை இழப்பு சதவீதம் 16.8 ஆக உள்ளது. இது மிகவும் ஆபத்தான போக்கு. நிலைமை இவ்வாறு இருக்க, டிரம்ப்போ, 'மிஷன் அகம்ப்லிஷ்ட்' (முயற்சி நிறைவேறிவிட்டது) எனக் கூறும் வகையில் பேசி வருகிறார். இவ்வாறு பிடன் பேசினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X