இந்தியாவில் கொரோனா பரவல் 'ஆயுஷ்மான் பாரத்'திற்கான வாய்ப்பு

Added : ஜூன் 07, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
நியூயார்க்: ''இந்தியாவில் கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை 'ஆயுஷ்மான் பாரத்' காப்பீட்டு திட்டத்தை விரைவுபடுத்துவதற்கான வாய்ப்பாக பார்க்கலாம்'' என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ் கூறியுள்ளார்.இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.36 லட்சத்தை தாண்டியுள்ளது; பலி எண்ணிக்கை 6642 ஆக உயர்ந்துள்ளது.இந்நிலையில்
இந்தியா, கொரோனா, கொரோனா பரவல், ஆயுஷ்மான் பாரத், டெட்ரோஸ் அத்னம், உலக சுகாதார அமைப்பு, Ayushman Bharat, WHO chief, Covid-19,  India, Tedros Adhanom Ghebreyesus,  World Health Organization,  Ayushman Bharat, health insurance scheme, Covid-19 situation in India, Covid-19 pandemic, health ministry, health care, coronavirus, coronavirus outbreak

நியூயார்க்: ''இந்தியாவில் கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை 'ஆயுஷ்மான் பாரத்' காப்பீட்டு திட்டத்தை விரைவுபடுத்துவதற்கான வாய்ப்பாக பார்க்கலாம்'' என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ் கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.36 லட்சத்தை தாண்டியுள்ளது; பலி எண்ணிக்கை 6642 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் வைரசால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் நேற்று கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவலை நிச்சயமாக யாரும் விரும்ப மாட்டார்கள். இது பல நாடுகளுக்கு சவாலான விஷயமாக உள்ளது. அதேசமயம் அதிலுள்ள வாய்ப்புகளையும் நாம் பார்க்க வேண்டும்.

உதாரணத்திற்கு இந்தியாவை எடுத்துக் கொண்டால் வைரசால் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி நிலையை ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தை விரைவுபடுத்துவதற்கான வாய்ப்பாக பார்க்கலாம்; குறிப்பாக ஆரம்ப சுகாதார சேவையில் கவனம் செலுத்தலாம்.இந்திய அரசு ஆயுஷ்மான் பாரத் திட்ட நடைமுறைகளை விரைவுபடுத்துவதில் உறுதியாக இருப்பதை நான் அறிவேன். இந்தியாவில் வைரசால் ஏற்படும் மோசமான நிகழ்வுகள் விரைவில் கட்டுப்படுத்தப்படும் என நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news
பின் உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி மைக்கேல் ரியான் கூறியதாவது:இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரட்டிப்பாகும் காலம் மூன்று வாரங்களாக உள்ளது. இங்கு வைரஸ் அதிவேகமாக பரவவில்லை; ஆனால் வளர்ந்து வருகிறது. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் வைரஸ் பாதிப்புகள் வெவ்வேறு விதமாக உள்ளது. நகர்ப்புறங்களில் ஒரு விதமாகவும் கிராமப்புறங்களில் ஒரு விதமாகவும் உள்ளது. தெற்காசியாவில் இந்தியாவில் மட்டுமல்லாமல் பாகிஸ்தான் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலும் வைரஸ் தொற்று தீவிரமடையவில்லை. எனினும் அது நடக்கும் ஆபத்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை அழுகும் - சென்னை,இந்தியா
07-ஜூன்-202022:02:25 IST Report Abuse
தாமரை அழுகும் மோடி ஆட்சியில் எல்லாம் சாபக்கேடாக நடக்கிறது
Rate this:
Cancel
துயில் விரும்பி - coimbatore,இந்தியா
07-ஜூன்-202013:58:50 IST Report Abuse
துயில் விரும்பி எல்லாம் சேர்ந்து ஒரு பிசினெஸ்ஸா பண்ணிக்கலாம்னு சொல்றிங்களா ஆபிசர்
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
07-ஜூன்-202012:08:23 IST Report Abuse
vbs manian இந்தியாவில் காரோண கட்டுங்கடங்காமல் இருப்பதற்கு முழுக்க முழுக்க மக்களே காரணம். பம்பாய் சென்னை போன்ற நகரங்களில் இரண்டு அறைகளில் இருபது பேர் வ சிக்கிறார்கள். சுகாதாரம் இல்லை. வயிற்று பிழைப்பே சவாலாக இருக்கும் பொது மற்ற விஷயம் கவனம் இல்லை. மேலை நாடுகளில் அரசாங்கம் வித கட்டுப்பாடுகளை மதித்து வாழ்கிறார்கள். பொது நல அக்கறை அதிகம். இங்கு நீ யார் சொல்ல என்கிறார்கள். மக்களுக்கு அக்கறை இல்லாத பொது எந்த அரசும் எதுவும் செய்ய முடியாது. அரசியல் வாதிகள் ஆதாயம் தேடல். விமோச்சனம் அருகில் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X