பொது செய்தி

தமிழ்நாடு

தாயகம் திரும்பிய 700 இந்தியர்கள்; தூத்துக்குடியில் வரவேற்பு

Updated : ஜூன் 07, 2020 | Added : ஜூன் 07, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
கொரொனா, தாயகம், இந்தியர்கள், தூத்துக்குடி, கப்பல், Maldives, INS Jalashwa, Tuticorin,  Indian Nationals, Tuticorin Port, Operation Samudra Setu, Indian High Commission in Male,  passengers, Kochi, Sri Lanka, Tuticorin

திருநெல்வேலி ; கொரோனா முன்னெச்சரிக்காக வான் எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் பல நாடுகளிலும் சிக்கியுள்ள இந்தியர்களை சமுத்திர சேது என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்த திட்டத்தின்படி மாலத்தீவில் சிக்கித்தவித்த தமிழர்கள் உட்பட இந்தியர்கள் 700 பேரை ஐ.என்.எஸ். ஜலஸ்வா என்ற போர் கப்பல் மூலமாக தாயகம் அழைத்து வந்தனர். தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் நிலக்கரி இறங்குதளத்தில் அனுமதிக்கப்பட்ட கடற்படை கப்பலிலிருந்து ஒவ்வொருவராக சமுக இடைவெளியுடன் தரையிறக்கப்பட்டனர். இந்த கப்பலில் தமிழ்நாட்டை சேர்ந்த 508 பேர் உள்பட 700 பயணிகள் வந்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களது உடமைகளில் கிருமிநாசினி தெளிக்கப்படும்.


latest tamil newsஇதனை தொடர்ந்து அவர்கள் பஸ்கள் மூலம் குடியுரிமை பரிசோதனை முனையத்திற்கு அனுப்பிவைக்கபட்டு குடியுரிமை அதிகாரிகளின் சோதனைக்கு பிறகு அவர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். ஐ.என்.எஸ் ஜலஸ்வா கடற்படை கப்பல் மூலம் கடந்த 2 ஆம் தேதி இலங்கையில் இருந்து 713 இந்தியர்கள் தூத்துக்குடி அழைத்து வரப்பட்டனர். மேலும் வரும் 17 ஆம் தேதி ஈரானில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் ஐ.என்.எஸ் ஜலஸ்வா மூலம் இந்தியா அழைத்து வரப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-ஜூன்-202020:04:50 IST Report Abuse
ஆப்பு மாலத்தீவில் இம்புட்டு இந்தியர்களா?
Rate this:
Cancel
07-ஜூன்-202013:09:46 IST Report Abuse
நக்கல் மக்களே புரிந்து கொள்ளுங்கள்... இந்தியால இருக்கற எதிர்க்கட்சிகள் எல்லோருக்கும் நீங்கள் வாக்கு வங்கி மட்டும்தான்... பிரச்சனை என்றால் யார் உதவ வருவார்கள் என்று யோசியுங்கள்... எல்லா விஷயத்திலும் யோசித்து முடிவெடுத்தால் தவறு நடப்பது குறையும், நாடும் காப்பாற்றப்படும்... உங்கள் குழந்தைகள் எதிர் காலத்தை பற்றி சிந்தியுங்கள்...
Rate this:
Cancel
s vinayak - chennai,இந்தியா
07-ஜூன்-202012:59:29 IST Report Abuse
s vinayak போர் முனையிலிருந்து வெற்றி பெற்றா திரும்புகிறார்கள் வரவேற்பதற்கு. மாலத்தீவில் ஏதோ செய்து கொண்டு சந்தோசமாக காலம் கழித்துத் கொண்டுதானே இருந்தார்கள். அப்பறம் என்ன சிக்கித் தவித்துக் கொண்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X