பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவை தடுக்க மக்களின் ஒத்துழைப்பு தேவை: முதல்வர் இ.பி.எஸ்.,

Updated : ஜூன் 07, 2020 | Added : ஜூன் 07, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை: கொரோனா தடுப்பு பணிகள் குறித்து விரிவாக விளக்கமளித்து, பொது மக்களுக்கு முதல்வர் இ.பி.எஸ்., கடிதம் எழுதியுள்ளார். அதில், ஊரடங்கை அரசு அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை என்றால், இந்நோய் பரவலை தடுப்பது சாத்தியம் ஆகாது என தெரிவித்துள்ளார்.அந்த கடிதத்தில், முதல்வர் இ.பி.எஸ்., எழுதிய கடிதத்தில்
Covid-19 in TN, corona in Chennai, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, Palaniswami, eps, tn cm, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, TAMIL NADU, chennai, கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்-19, முதல்வர் இ.பி.எஸ்., முதல்வர் இபிஎஸ், இபிஎஸ், எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி கே. பழனிசாமி, முதல்வர் பழனிசாமி, பொது மக்கள், ஊரடங்கு,

சென்னை: கொரோனா தடுப்பு பணிகள் குறித்து விரிவாக விளக்கமளித்து, பொது மக்களுக்கு முதல்வர் இ.பி.எஸ்., கடிதம் எழுதியுள்ளார். அதில், ஊரடங்கை அரசு அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை என்றால், இந்நோய் பரவலை தடுப்பது சாத்தியம் ஆகாது என தெரிவித்துள்ளார்.

அந்த கடிதத்தில், முதல்வர் இ.பி.எஸ்., எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த இரண்டு மாதங்களாக, மிகவும் இக்கட்டான சூழ்நிலையை உங்களின் ஒத்துழைப்பு மற்றும் பேராதரவுடன் நாம் கடந்து வந்துள்ளோம். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை நாம் அனைவரும் எதிர்கொள்கின்ற நெருக்கடிகள் கற்பனை செய்ய இயலாதவை. ஒரு திருமணத்திற்கோ, நெருங்கியவர்களின் இறுதி சடங்குகளிலோ கூட கலந்து கொள்ள முடியாத துயரங்களை எல்லாம் கொரோனா வைரஸ் நமக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வைரஸ் , நமது இயல்பு வாழ்க்கையை பாதித்ததோடு மட்டுமல்லாமல், நம் பொருளாதாரத்தையும் பாதித்து விட்டது.

சீனாவில், கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டது பற்றி அறிந்தவுடன், 2020 ஜன., முதல் முனைப்புடன் செயல்பட்டு துரிதமான நடவடிக்கைகளை நான் முடுக்கிவிட்டேன். தமிழகத்தில் மார்ச் 7 அன்று முதல் தொற்று ஏற்பட்டவுடன் களத்தில் துரிதமாக பல்முனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சமூக பரவல் என்ற நிலைக்கு ஒரு போதும், தமிழகம் ஆளாகிவிடக்கூடாது என்பதற்காக தான் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்கு தமிழக மக்கள் ஒத்துழைப்பு வழங்கினீர்கள்

இந்த ஊரடங்கினால், பல்வேறு கட்டுப்பாடுகளையும், சிரமங்களையும் நீங்கள் சந்தித்து இருப்பீர்கள். இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத உலகத்திற்கு புதியதான இந்த தொற்றினை எதிர்கொள்ள பொருளாதார வளமிக்க, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளே திணறி கொண்டிருக்கும் இத்தருணத்தில், அசாதாரண முன்னெச்சரிக்கையும், கட்டுப்பாடும் நமக்கு தேவைப்பட்டது. தனி மனித உறுதியும் ஒழுக்கமுமே கொரோனா தொற்றில் இருந்து நம்மை தற்காக்கும் என்பதை உணர்ந்து செயல்பட்டு வருகிறோம்.ஊரடகிற்கு, நீங்கள் முழுமையாக ஆதரவு அளித்து வருகிறீர்கள். விதிகளை மதிக்காமல் அனைவரும் இருந்திருந்தால், நாம்இதைவிட மோசமான விளைவுகளை சந்தித்து இருப்போம்.


latest tamil news
கூட்டு முயற்சியால், நோய் தொற்றில் இருநது குணமடைந்து வீடு திரும்புவோரின் சதவிகிதம் இன்று இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம். அதுமட்டுமல்லாமல், உயிர் இழப்போரின் சதவீதமும் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே தமிழகத்தில் தான் மிகக்குறைவு. இந்த வைரஸ் தொற்றினை வெற்றி கொள்ள, இந்தியாவிற்கே முன்னோடியாக அரசு திட்டமிட்டு பல்முனை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நோய் தொற்றினை பேரிடராக அறிவித்து கடந்த 4 ம் தேதி வரை 4 ஆயிரத்து 333 கோடியே 23 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது..

கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய் தடுப்பு பணிகளையும், நிவாரண பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இந்த நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 123 அரசு மருத்துவமனைகளும், 169 தனியார் மருத்துவமனைகளும் என 292 கோவிட் மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு, மருத்துவ சேவை மக்களுக்கு எளிதில் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. 3,384 வென்டிலேட்டர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ளன. தமிழக மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் சரியான வழிமுறைகளை எந்தவிதமான அச்சமின்றி நேர்மையுடனும், உண்மையுடனும் அரசு எடுத்து வருகிறது.

ஊரடங்கை அரசு அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை என்றால், இந்நோய் பரவலை தடுப்பது சாத்தியம் ஆகாது. வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் பொது மக்கள் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும். பொது மக்கள் கூடுமானவரை தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியில் செல்லும் போது கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடித்து ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muguntharajan - Coimbatore,இந்தியா
08-ஜூன்-202006:36:11 IST Report Abuse
Muguntharajan இந்தியாவிலேயே தமிழகம் தான் கொரானா பாதிப்பில் இரண்டாவது மாநிலம். இதற்கு முக்கிய காரணம் ரயில் விமான போக்குவரத்து. அதில் தமிழகம் வருபவர்களை 14 நாட்கள் தனிமை படுத்த வேண்டும்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
07-ஜூன்-202022:19:51 IST Report Abuse
Vena Suna நான் ஜாக்கிரதையா வீட்டுல இருந்தேன் lockdown னு. என்னை இரக்கமே இல்லாம வேலையை விட்டு அனுப்பிச்சுட்டாங்க. அரசு இந்த அநியாயங்களை கேட்க வேண்டும்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
07-ஜூன்-202022:15:58 IST Report Abuse
Ramesh Sargam மக்களின் ஒத்துழைப்பு, முக்கியமாக எதிர் கட்சிகளின் ஒத்துழைப்பு கண்டிப்பாக தேவை. இந்த முக்கியமான தருணத்தில் எதிர்க்கட்சியினர் 'அசிங்க அரசியல் (dirty politics)' செய்வது கண்டிக்கத்தக்கது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X