குஜராத்தில் ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் ராஜஸ்தானுக்கு மாற்றம்

Updated : ஜூன் 07, 2020 | Added : ஜூன் 07, 2020
Share
Advertisement

ஆமதாபாத்: குஜராத்தில் ராஜ்யசபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் 21 பேர், ராஜஸ்தானுக்கு அழைத்து சென்று நட்சத்திர விடுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.



latest tamil news



குஜராத், மணிப்பூர், கர்நாடகா, ஆந்திரா, ஜார்க்கண்ட், ம.பி., மேகாலயா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் காலியாக உள்ள 18 இடங்களை நிரப்புவதற்கு வரும் 19 ல் தேர்தல் நடக்கவுள்ளது. இந்த பதவியை பிடிக்க அந்தந்த மாநிலங்களில் கடும் போட்டி நிலவுகிறது.

குஜராத்தில் 4 ராஜ்யசபா உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். கொரோனாவுக்கு முன்னரே மார்ச்26 ல்நடக்க வேண்டிய தேர்தல், நோய் பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மொத்தம் 81 உறுப்பினர்களில் 16 உறுப்பினர்கள் ராஜினாமா செய்தனர். இதனால் தற்போது காங்கிரஸ் பலம் 65 ஆக உள்ளது. பா.ஜ., உறுப்பினர்கள் எண்ணிக்கை 103 ஆக உள்ளது. இங்கு குதிரை பேரத்தில் பாஜ., தலைவர் அமித்ஷா ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியான அபிஷேக் சிங்வி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ., தரப்பில் 4 சீட்களுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால் காங்கிரசுக்கு கிடைக்க வேண்டிய ஒரு சீட்டுக்கும் பங்கம் ஏற்படுமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு ராஜ்யசபா வெற்றி பெற 37 உறுப்பினர்கள் ஓட்டளிக்க வேண்டும். இதனால் மேலும் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா செய்வார்களோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் 21 பேர் ராஜஸ்தானுக்கு சொகுசு பஸ்களில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். தேர்தல் நடக்கும் நேரத்தில் மட்டுமே மீண்டும் குஜராத்துக்கு வருவார்கள் என கூறப்படுகிறது.


latest tamil news



கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் பலர் ராஜினாமா செய்ததால் ஆட்சி கவிழ்ந்து எடியூரப்பா முதல்வரானார். இதுபோல் மத்திய பிரதேசத்தில் காங்., எம்எல்ஏ.,க்கள் சிலர் ராஜினாமா செய்ததால் இங்கும் காங்., ஆட்சி கவிழ்ந்தது. ஒரு வழியாக முதல்வர் கமல்நாத் பதவி இழந்தார்.

குஜராத்தை பொறுத்தவரை ஆளும் பா.ஜ.,வுக்கு சில காங்., எம்எல்ஏ.,க்கள் மறைமுக ஆதரவு அளித்து வருகின்றனர். மேலும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் என்பதால் இவர்களின் செல்வாக்கை கண்டு காங்., அச்சத்தில் இருந்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X