பொது செய்தி

இந்தியா

கொரோனா பாதிப்பில் பெல்ஜியம், கத்தாரை முந்திய மஹாராஷ்டிரா..!!

Updated : ஜூன் 07, 2020 | Added : ஜூன் 07, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases worldwide, corona crisis, covid 19 pandemic, worldwide crisis, Maharashtra, coronavirus patients, Belgium, Qatar,
கொரோனா, பெல்ஜியம், கத்தார், இந்தியால மஹாராஷ்டிரா, தமிழகம், தமிழ்நாடு, குஜராத், டில்லி, டெல்லி,  ராஜஸ்தான், கொரோனாவைரஸ், கோவிட்-19,

மும்பை: பெல்ஜியம், கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகளை விட மஹாராஷ்டிராவில் அதிகமாக கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 9,971 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 287 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.46 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 6,929 ஆக அதிகரித்துள்ளது. ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலை தரவுகளின்படி, கொரோனா பாதிப்பில் ஸ்பெயினை விஞ்சி இந்தியா 5 வது இடத்திற்கு சென்றுள்ளது. இந்தியாவில் அதிகமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ள மஹாராஷ்டிரா, எண்ணிக்கையில் சீனாவை நெருங்கி வருகிறது. எகிப்து, பெல்ஜியம், கத்தார் மற்றும் 80 ஆயிரத்திற்கும் குறைவாக கொரோனா தொற்று பதிவான நாடுகளை மஹாராஷ்டிரா தனியாக முந்தியுள்ளது.


latest tamil news



இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, டில்லி, குஜராத் மாநிலங்கள் முதல் நான்கு இடங்களில் உள்ளன. மஹாராஷ்டிராவில் 82,968 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 2,969 பேர் உயிரிழந்துள்ளனர். 37,390 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 30,152 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 251 பேர் உயிரிழந்துள்ளனர். 16,395 பேர் குணமடைந்துள்ளனர்.
டில்லியில் 27,654 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 761 பேர் உயிரிழந்துள்ளனர். 10,664 பேர் குணமடைந்துள்ளனர்.

குஜராத்தில் 19,592 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,219 பேர் உயிரிழந்துள்ளனர். 13,316 பேர் குணமடைந்துள்ளனர்.

ராஜஸ்தானில் 10,331 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். 7,501 பேர் குணமடைந்துள்ளனர். 231 பேர் உயிரிழந்துள்ளனர்.

10 ,000க்கும் குறைவான பாதிப்புள்ள மாநிலங்கள் :மத்திய பிரதேசம் - , 9,228
உத்தரப்பிரதேசம் -, 9,773
மேற்கு வங்கம் - 7,738
பீஹார் - 4,915
ஆந்திரபிரதேசம் - 4,510
கர்நாடகா - 5,000
தெலுங்கானா மற்றும் ஜம்மு காஷ்மீர் - 3,400
ஹரியானா - 4,000


latest tamil news


ஒடிசா, பஞ்சாப், உத்தர்காண்ட், கேரளா, ஜார்க்கண்ட், அசாம், திரிபுரா மாநிலங்களில் 3 ஆயிரத்திற்கும் குறைவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சண்டிகர்,மணிப்பூர், கோவா,நாகலாந்து, ஹிமாச்சல் மாநிலங்களில் சுமார் 500க்கும் குறைவான பாதிப்புக்களும், புதுச்சேரி, மேகாலயா, லடாக், அருணாச்சல் பிரதேசம், மிசோரம்,சிக்கிம், தாதர் நாகர்வேலியில் 100க்கும் குறைவான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அந்தமான் நிகோபர் தீவுகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07-ஜூன்-202017:13:56 IST Report Abuse
Janarthanan இந்தியாவின் இப்பொழுது நோய் தொற்று அதிகமாக ஏறி கொண்டு இருக்க காரணமா இருக்கும் முதல் மாநிலம் காங்கிரஸ் கூட்டு களவாணி மஹவால் தான், பின்பு காங்கிரஸ் கட்சி துதி பாடும் தமிழ்நாடு, அதன் பிறகு டெல்லி??? இந்த லோக் டவுன் தோல்வி அடைய வேண்டும் என்பத்திற்கு ஆக உள்ளடி வேலையை கட்சிதமாக செய்து விட்டாச்சு காங்கிரஸ்??? காங்கிரஸ் கட்சியின் அரசியல் லாபத்திற்கு எந்த அளவிற்கு போவீங்க என்று மக்கள் உணர்வுவார்கள்
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
07-ஜூன்-202016:12:18 IST Report Abuse
vbs manian ஒப்பீடு சரியில்லை. மகாராஷ்டிரா ஜனத்தொகை பதினொன்று கோடி. கட்டர் இருபத்தெட்டு லட்சம். பெல்ஜியம் ஒன்றே கால் கோடி. ஜனத்தொகை மஹாராஷ்டிராவில் மிகஅதிகம். ஆகவே தோற்றும் அதிகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X