பல நாடுகளுக்கும் பரவும் அமெரிக்க போராட்டம்

Updated : ஜூன் 07, 2020 | Added : ஜூன் 07, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
ஜார்ஜ் பிளாய்டு, அமெரிக்கா, ஜெர்மனி, தென் கொரியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், போராட்டம், George Floyd, Floyd death, protests, america, us, london

லண்டன் : ஆப்ரிக்க அமெரிக்கரான, ஜார்ஜ் பிளாய்டின் மரணத்துக்கு அமெரிக்காவில் நடந்து வரும் போராட்டம், உலகின் மற்ற நாடுகளுக்கும் பரவ துவங்கியுள்ளது.

அமெரிக்காவில், போலீஸ்காரர் ஒருவர் தன் முழங்காலால் கழுத்தை நெருக்கியதில், ஜார்ஜ் பிளாய்டு என்ற ஆப்ரிக்க அமெரிக்கர் உயிரிழந்தார். இதனால், அமெரிக்க முழுதும், போராட்டம் வெடித்தது. மினியாபொலிஸ் நகரில், மக்கள் வீதிகளில் இறங்கி, இனவெறிக்கு எதிராக குரல் கொடுத்தனர். பல கடைகள், சூறையாடப்பட்டன. இதையடுத்து, கலவரக்காரர்கள் மீது, கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், மிளகு பொடி துாவியும், கலவரத்தை அடக்க, போலீசார் முயன்றனர். இதனால், வன்முறை சம்பவங்கள் அதிகமானது.


latest tamil newsஇந்நிலையில் ஜார்ஜ் பிளாய்டின் மரணத்தை கண்டித்து, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளிலும், ஜப்பான் தலைநகர் டோக்கியோ, ஆஸ்திரேலியா தலைநகர் கான்பர்ராவிலும் போராட்டங்கள் நடந்தன.


லண்டன்latest tamil news


Advertisement


லண்டன் மத்திய பகுதியில் உள்ள பார்லிமென்ட் சதுக்கத்திலும் அதனை சுற்றிய பகுதிகளிலும், போராட்டம் நடந்தது. கடும் குளிர் மற்றும் மழையை பொருட்படுத்தாமல் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் ஜார்ஜ் பிளாய்ட் பெயரை சொல்லி கோஷமிட்டனர். நீதி இல்லை அமைதி இல்லை எனுவும் கோஷமிட்டனர். ஜார்ஜ் பிளாய்டுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில், அவர்கள் தரையில் முழங்காலிட்டு அமர்ந்தனர்.


பிரான்ஸ்


பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு ஆயிரகணக்கானோரும், உலக புகழ் பெற்ற ஈபிள் டவர் முன்பு 20 ஆயிரம் பேரும் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். அப்போது, 2016ல் பிரான்சில் வசித்த அடாமா த்ராரோர் என்ற கறுப்பினத்தவர் போலீஸ் காவலில் உயிரிழந்ததை நினைவு கூர்ந்தனர்.


ஜெர்மனி


ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள அலெக்சாண்ட்ரா சதுக்கத்தில் நடந்த போராட்டத்தில் 15 ஆயிரம் பேர் பங்கேற்று, போலீசார் அத்துமீறுவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.


latest tamil newsஜார்ஜ் பிளாய்ட் மரணம் தொடர்பாக ஜெர்மன் சான்சிலர் ஏஞ்சலா மெர்கல் கூறுகையில், இந்த சம்பவம் கொடூரமானது. இனவெறியுடன் நடத்தப்பட்டது. இங்கும் இனவெறி செயல்கள் உள்ளன. அதனை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. அதேநேரத்தில், அமெரிக்க ஜனநாயகத்தின் வலிமை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அதனால், தற்போதுள்ள கடினமான சூழ்நிலையில் இருந்து வர முடியும் எனக்கூறினார்.


ஆஸ்திரேலியா
latest tamil newsஅதேபோல், ஆஸ்திரேலியாவின் பல நகரங்களிலும் ஜார்ஜ் பிளாய்டு மரணத்திற்கு நீதி கேட்டு மரணம் ந டந்தது. பழங்குடியினரை அரசு நடத்தும் விதத்தை கண்டித்து போராட்டம் நடத்தினர். கொரோனா காலத்தில் அதிகளவில் கடினால், பாதிப்பு ஏற்படுத்தும் என பிரதமர் ஸ்காட் மாரிசன் எச்சரித்துள்ளார்.
மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன், அடிலெய்ட் மற்றும் ஹோபர்ட் நகரங்களில் போராட்டம் நடந்தது 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லந்து கொண்டனர்.


தென் கொரியாlatest tamil news
தென் கொரியாவின்வர்த்தக நகரங்களில் ஏராளமானோர், 2வது நாளாக ஒன்று கூடினர். கறுப்பு உடை அணிந்திருந்த அவர்கள், ஊர்வலமாக சென்றனர். ஜார்ஜ் பிளாய்டு ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Tirunelveli,இந்தியா
07-ஜூன்-202023:37:21 IST Report Abuse
Raj ஜாதி மற்றும் மத வெறிக்கு எதிரான போராட்டம் வெடிக்கட்டும்.
Rate this:
Cancel
Nagar - Dukhan ,கத்தார்
07-ஜூன்-202020:51:42 IST Report Abuse
Nagar ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்களை அடக்கு முறையில் சித்திரவதை செய்யும் சீன தேசம் தான் இந்த வன்முறை போராட்டங்களை தூண்டிவிடுகிறது
Rate this:
Cancel
Kalam - Salem,இந்தியா
07-ஜூன்-202018:02:37 IST Report Abuse
Kalam சீனாவிலே எத்தனை பேரு அடக்குமுறைல கொல்லரணுங்க ? ஏதாவது டேட்டா இருக்கா? அரேபியாவிலே அதிகார திமிர்ல எத்தனை பேரு கொல்லரானுங்க ? டேட்டா இருக்கா ? ஏதோ அமெரிக்கா , இந்தியா வை போல ஒரு ஜனநாயக நாடு . ஒரு டேட்டா கிடைக்குது . கண்டிப்பா இந்த அளவு லார்ஜ் ஸ்கேல் வன்முறை பின்னாடி சீனாவின் வேலை இறுக்க வாய்ப்பு அதிகம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X