அனைவரும் மூன்று அடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும்: புதிய வழிகாட்டுதல் வெளியீடு

Updated : ஜூன் 07, 2020 | Added : ஜூன் 07, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
கொரோனா, கொரோனாவைரஸ், முககவசம், உலகசுகாதார அமைப்பு, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death, corona crisis, corona cases worldwide, corona crisis, covid 19 pandemic, WHO, guidelines, 3-layer face masks, public

ஜெனிவா: கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைவரும் பொதுவெளியில் மூன்று அடுக்குகள் கொண்ட துணி முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் விஷயத்தில் வரும் முன் காப்பதே புத்திசாலித்தனம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கையாக முகக்கவசம் அணிவது, வெளியே சென்று வந்தால் கைகளை கழுவுவது, தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். இந்த நிலையில் முகக்கவசம் அணிவது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இது குறித்து இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கூறியதாவது: புதிய ஆராய்ச்சியின் அடிப்படையில், துணி முகக்கவசம் குறைந்தது மூன்று அடுக்குகளைக் கொண்டிருக்க வேண்டும். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் அல்லது உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் சமூக இடைவெளி கடைப்பிடிக்க முடியாத இடங்களில் மருத்துவ முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசத்தை அசுத்தமான கைகளைப் பயன்படுத்தி சரி செய்வதோ அல்லது மீண்டும் மீண்டும் கழற்றி மாட்டுவதோ கூடாது. இதனால் மக்கள் தங்களுக்கு தாங்களே தொற்றை பரப்பிக்கொள்கிறீர்கள் என்பதை உணர வேண்டும். ஒரு விரிவான அணுகுமுறையின் ஒரு பகுதியாக மட்டுமே முகக்கவசங்கள் பயன் தரும். இவ்வாறு கூறினார்.


latest tamil newsலான்செட் மருத்துவ ஆய்விதழில் 16 நாடுகளிலிருந்து வெளியான 172 ஆய்வுகளை ஆராய்ந்து, ஒற்றை அடுக்கு முகக்கவசங்களை விட பல அடுக்கு முகக்கவசங்கள் மிகவும் பாதுகாப்பானவை என்று கண்டறிந்துள்ளனர். மூன்று அடுக்கு முகக்கவசத்தில் முகத்தை மூடும் பகுதி உறிஞ்சும் தன்மை கொண்ட பருத்தியினாலும், அதைத் தொடர்ந்து ஒரு பாலிபுரொபலின் அடுக்கும், அதன் பின்னர் திரவத்தை எதிர்க்கும் ஒரு சிந்தடிக் அடுக்கும் இருக்கும் வகையில் தயாரிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவன பரிந்துரைத்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
11-ஜூன்-202011:32:11 IST Report Abuse
skv srinivasankrishnaveni ஆகாச நீலநிறத்துலே பத்து ருருபை மாஸ்க்கை 20ருவாக்கு விக்குறாங்களே தெரியுமா எனக்குத்தெரிஞ்சவர் தன் பிரென்ட் தையல்காரரிடன் துணிகள் கொடுத்து கூலியும் தந்து ட்டு பலருக்கும் இலவசமா இந்த மாஸ்க்கை இலவசமாதருகிறார் தைக்கும் தையல்காரருக்கும் கூளையும் தந்துடுராருங்க ஒரு பனியன் தயாரிப்பாளரும் இதுபோல மாஸ்கி செய்து 10றுவாய்க்கி விற்கிறார் நல்ல மனம் வாழ்க என்று வாழ்த்துவோமா
Rate this:
Cancel
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
08-ஜூன்-202001:09:07 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி நீங்கல்லாம் மாஸ்க் போடலியா? மூணு மாஸ்க் போடோனும்மா. போட்டோல கூட போடோணும். இல்லின்னா போலீஸ் புடிச்சீ போயிரும்.
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
07-ஜூன்-202023:12:42 IST Report Abuse
Krishna People Will Die Of Suffocation-Corona Terrorism
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X