பொது செய்தி

தமிழ்நாடு

கோவை அரசு மருத்துவமனையில் டெக்னீசியனுக்கு கொரோனா

Added : ஜூன் 07, 2020
Share
Advertisement

கோவை: கோவை அரசு மருத்துவமனையில், செயற்கை கால் பொருத்தும் பிரிவில் டெக்னீசியனாக 27 வயது நபர் பணிபுரிந்து வருகிறார். விழுப்புரத்தை சேர்ந்த இவர், மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக சொந்த ஊர் சென்றுள்ளார்.

ஊரடங்கினால், அங்கேயே இருந்த அவர், பணிக்கு திரும்ப முடியவில்லை. ஊரடங்கில் தளர்வை தொடர்ந்து கடந்த 2ம் தேதி, மருத்துவமனைக்கு வந்த அவர், துறை தலைவரை சந்தித்தார். அவரிடம் பணிக்கு வராதது குறித்து கேள்விக்கு வெளியூர் சென்றது தெரியவந்தது. இதனால், பணிக்கு வர வேண்டாம் எனவும், தனிமைபடுத்தி கொள்ள அறிவுறுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். கோவை ராமநாதபுரத்தில் வீடு எடுத்து தங்கியுள்ள அவர், அங்கு சென்று தனிமைபடுத்தி கொண்டார். இந்நிலையில், கொரோனா அறிகுறி தென்படவே அவர், தாமாக முன்வந்து, கடந்த 5ம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில், அவருக்கு கொரோனா இருப்பது இன்று உறுதியானது.
இதனையடுத்து அவர் வந்து சென்ற துறையில் 14 பேருக்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அந்த இடமும் கிருமி நாசினி தெளித்து தூய்மைபடுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X