போராட்ட குப்பைகளை அகற்றிய இளைஞருக்கு கிடைத்த பரிசு..!

Updated : ஜூன் 07, 2020 | Added : ஜூன் 07, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

நியூயார்க்: அமெரிக்காவில் போராட்டத்திற்கு பின் தெருக்களில் தேங்கியுள்ள குப்பைகளை தாமாக களமிறங்கி தூய்மைப்படுத்திய இளைஞரை பலர் பாராட்டியதுடன், கார், கல்வி உதவித்தொகையையும் பரிசாக அளித்துள்ளனர்.latest tamil newsஅமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொலைக்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. பல இடங்களில் போராட்டக்காரர்கள் போலீசார் இடையே மோதல் வெடிப்பதால் வன்முறை களமாக மாறியுள்ளது. போராட்டகாரர்கள் காலி பாட்டில்கள், பதாகைகளை போலீசார் மீது வீசுவதால் தெருக்கள் குப்பைக்களமாக காட்சியளிக்கின்றன.

நியூயார்க்கின் பப்பலோ நகரை சேர்ந்த 18 வயதாகும் இளைஞரான அன்டோனியோ க்வின் ஜூனியர் வித்தியாசமாக செயல்பட முடிவெடுத்துள்ளார். துடைப்பம் மற்றும் குப்பை அள்ளும் பைகளை கொண்டு வந்து ,தெருக்களை சுத்தம் செய்ய துவங்கியுள்ளார். கடந்த திங்களன்று அதிகாலை 2 மணிக்கு துவங்கி 10 மணி நேரம் தொடர்ந்து தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அன்டோனியோவின் பெயரும், பொறுப்புணர்வும் குறித்த செய்திகள் பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.

இதனை தொடர்ந்து பலரும் அன்டோனியோவுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்ய முன்வந்துள்ளனர். அதே பகுதியை சேர்ந்த மாட் பிளாக் என்பவர் தனது சிவப்பு நிற முஸ்டாக் காரை க்வினுக்கு பரிசாக அளித்துள்ளார். மற்றொரு தொழிலதிபர் ஒருவர் ஒருவருடத்திற்கு இலவச காப்பீட்டு அளிப்பதாகவும், பப்பலோ நகரத்தில் உள்ள கல்லூரி நிர்வாகம் , க்வினின் முழு ஸ்காலர்ஷிப் வழங்குவதாகவும் அறிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு கொலையை கண்டித்து நடக்கும் போராட்டங்களில், பல்வேறு நகரங்களை போலவே, பப்பலோ நகரத்திலும் இரவுக்கு பின் கொள்ளையடிப்பது நிகழ்வுகள் நடந்து வருகிறது. மற்றபடி, அங்கு அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.


latest tamil newsநிற பாகுபாடு காட்ட எதிர்ப்பு தெரிவித்து பப்பலோ நகரில் நடந்த போராட்டத்தின் போது, 75 வயது முதியவரான மார்ட்டின் குஜினோவை, இரண்டு போலீசார் தாக்குதல் நடத்தும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. தரையில் விழுந்த வேகத்தில் படுகாயமடைந்த முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் உட்பல பல தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தது. இரண்டு போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனிடையே இரண்டு போலீசாருக்கு ஆதரவாக 57 போலீசார் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
09-ஜூன்-202005:23:51 IST Report Abuse
skv srinivasankrishnaveni நேற்று அசுரன் என்று ஒரு மூவிப்பார்த்தேன் நல்லகாலம் கொஞ்சம்தான்பாத்தேன் எரிச்சலமூண்டது என்னடப்படம் எடுக்கிறீங்க என்று கண்டமேனிக்குதிட்டிண்டு டிவி யை அணைச்சுட்டுப்போயிட்டேன் கண்றாவி ஒரு பண்ணிக்குபிரதவன் ஒரு பொண்ணை அவ கீழ்சாதி என்று சொல்லி அவ செருப்புபோட்டுவந்ததுக்கு அவளை என்ன பாடுபடுத்துறான் பன்னாடை வௌக்குமாத்தால் அடிக்கனும்னே வெறி வந்தது ஆபாசம் படம் எடுத்தவன் தான் போருக்கு என்பேன் எவ்ளோகீழ்தரமான புத்தி அவனுக்கு சில லக்ஷம் தந்து நடிக்கவச்சுருக்கான் ஒரு பொண்ணை அவளும் காசுக்குவேண்டி நடிக்கலாம் ஆனாலும் இந்தகேவலமான எண்ணம் மாபெரும் தப்பு என்தகுப்பமேலேயும் நடக்காது அப்படி நடந்தால் அதுகள் இன்னம் பாபெரியன்ஸ் தான் என்று சொல்லி அதுகளைக்கொண்டுபோயி தப்பிக்கமுடியாதகாட்டுலே தள்ளிடனும் சீ அதுபார்த்துட்டு வேல் டெவலப்டு அமெரிக்கால இவ்ளோ அநாகரீகம் இருக்கே இந்தியாலேகேக்கணுமா படம் எடுப்பவன் ஒன்னு துலுக்கன்ஆர் கிறிஸ்துவின் தங்கல்மதம் தான் ரொம்பவே ஒசத்தி என்று எண்ணிண்டு நம்ம மடத்தை கேவலம் செய்து தான் எடுக்கிறான் பாக்கறவன் பயித்தியமா சாதிவெறின்னு எங்கே அராஜகம்னாலும் ஓட்டவேண்டும் அவனுக திமிரை
Rate this:
Cancel
jayanantham - tamilnaadu ,இந்தியா
08-ஜூன்-202007:30:28 IST Report Abuse
jayanantham "கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு"........இவர் நாற்பத்தேழு வயதை நெருங்கியவர். அன்டோனியோ க்வினுக்கு பரிசளிக்கப்பட்ட கார் "மஸ்டாங்" என்பதாகும்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
08-ஜூன்-202004:02:18 IST Report Abuse
J.V. Iyer எதிர்ப்பு தெரிவிக்கலாம், ஆனால் பொது சொத்துக்களையும், தனியார் சொத்துக்களையும் சேதப்படுத்த இவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது? இந்த இளைஞரின் செயல் பாராட்டத்தக்கவை. இவர்போன்ற இளைஞர்கள் முன்வந்து நாட்டை திருத்த வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X