பொது செய்தி

இந்தியா

சுற்றுலா தலங்கள், நினைவுச் சின்னங்கள் இன்று முதல் திறக்கலாம்

Updated : ஜூன் 08, 2020 | Added : ஜூன் 07, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
tourist places, monuments, reopen, Tourism, Prahlad Singh Patel, Tourism Minister, Culture ministry, ASI, சுற்றுலா தலங்கள், நினைவுச் சின்னங்கள் , திறப்பு

புதுடில்லி: மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தளங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை இன்று(ஜூன் 8) முதல் திறக்க மத்திய கலாசாரத்துறை அனுமதி வழங்கி உள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு 5வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு, உணவங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி, உள்ளிட்ட மேலும் சில தளர்வுகளை மாநில அரசுகள் அமல்படுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.


latest tamil news



இந்நிலையில், உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல் படி, மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தளங்கள், நினைவுச் சின்னங்களை இன்று முதல் திறந்து கொள்ளலாம் என மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல், டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், சமூக இடைவெளி, முக கவசம் உள்ளிட்டவை கட்டாயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஜூன்-202007:50:39 IST Report Abuse
ஆப்பு என்னமா பில்டப் குடுத்தாய்ங்க.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
07-ஜூன்-202021:36:38 IST Report Abuse
Visu Iyer கொரநா போயிடுச்சி... இவுங்க நினைத்தால் திறக்கலாம் என்கிறார்கள்.. இவுங்க நினைத்தால் மூடலாம் என்கிறார்கள்.. திறக்கலாம் என்று சொன்ன மருத்துவ குழு எங்கே.. அதன் அறிக்கை எங்கே.. இப்படி தான் ஜெயலலிதா இறந்த போது மருத்துவ குழு அறிக்கை கேட்டதற்கு கடைசி வரை தரவே இல்லை.. ஏதோ அப்புறம் தயார் செய்து வந்து படித்தார்கள் என நினைவு.. மத்திய அரசின் பொறுப்பில் இருந்த ஆட்சி பொறுப்பில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாது காப்பில் உள்ள சந்தேகம் இன்னமும் தெளிவாகவில்லை என்ற நிலையில் .. இவர்கள் சொல்லும் எதையும் நம்புவதற்கு மக்கள் தயங்குகிறார்கள்.. தெளிவில்லாத இவர்கள் அறிவிப்பும் அச்சமும் மக்களை அமைதியாக நிம்மதியாக வாழ விடுமா... என்ற கேள்விக்கு குறியில்.. தொடருமா வாழ்க்கை பயணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X