சிகிச்சை கட்டணம் செலுத்தாததற்காக முதியவரை கட்டிப்போட்ட மருத்துவமனை

Updated : ஜூன் 07, 2020 | Added : ஜூன் 07, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement

ஷாஜாபூர்: மத்தியப் பிரதேசத்தில் சிகிச்சை கட்டணம் செலுத்தத் தவறியதற்காக 80 வயது முதியவர் ஒருவரை மருத்துவமனை நிர்வாகம் படுக்கையில் கட்டிப்போட்டுள்ளது . இப்புகைப்படம் வெளியாகி சர்ச்சையாகியுள்ளது.latest tamil newsமத்திய பிரதேசம் மாநிலம் ஷாஜாபூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதியவர் ஒருவர் உடல் நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கும் போது அவரது மகள் ரூ.5 ஆயிரத்தை முன் பணமாக செலுத்தியுள்ளார். சிகிச்சை சில நாட்கள் நீடித்ததால் அவரது சிகிச்சை கட்டணம் ரூ.11 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

தந்தையின் சிகிச்சை கட்டணத்தை செலுத்தும் அளவிற்கு தன்னிடம் பணம் இல்லை என அவர் மகள் கூறியுள்ளார். பணம் செலுத்தாமல் முதியவரை அழைத்து சென்றுவிடக் கூடாது என்பதற்காக மருத்துவமனை படுக்கையோடு சேர்த்து அவரை கட்டி வைத்துள்ளனர். இதனை சிலர் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிடவே இவ்விஷயம் சர்ச்சையானது.


latest tamil newsஇது குறித்து மருத்துவமனை தரப்பில், எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வு காரணமாக அவருக்கு மனநிலை மாற்றம் ஏற்பட்டதால், தன்னை தானே காயப்படுத்திக்கொள்ளாமல் இருக்க கட்டப்பட்டிந்ததாகவும், மனிதாபிமான அடிப்படையில் அவரின் சிகிச்சை கட்டணத்தை தள்ளுபடி செய்துவிட்டதாகவும் கூறியுள்ளது. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் இவ்விஷயத்தை கவனத்தில் கொண்டு, மருத்துவமனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
14-ஜூன்-202014:42:12 IST Report Abuse
Tamilnesan அதான் இந்திய மருத்துவமனைகளின் வண்டவாளங்களை ரமணா படத்தில் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளனரே. மருத்துவமனைக்கு உடனே சீல் வைக்கவேண்டும்.
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-ஜூன்-202016:26:25 IST Report Abuse
தமிழ்வேல் யாரு ஆட்சின்னு எழுத மறந்துட்டாங்க.
Rate this:
Cancel
Indian - ..,இந்தியா
08-ஜூன்-202022:39:39 IST Report Abuse
Indian இறந்த உடலை நீண்ட நாள் வைத்து வைத்தியம் பார்ப்பது, ஒயிருடன் இருக்கும்போது போஸ்டமொடேர்ன் பண்ணுவது தனியாரின் சாகசங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X