மஹா.,வில் 3 ஆயிரம் பேர் பலி; ஒரே நாளில் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 09, 2020 | Added : ஜூன் 07, 2020
Share
Advertisement
Maharashtra, death toll, covid 19, coronavirus crisis, corona, coronavirus, covid-19 in india, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, மஹாராஷ்டிரா, கொரோனா

மும்பை: மஹாராஷ்டிராவில் ஒரே நாளில் 3007 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது; மொத்த பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாட்டில் அதிக கொரோனா பாதிப்புக்குள்ளான மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது. இந்நிலையில், அங்கு புதிதாக இன்று(ஜூன் 7) மட்டும் 3,007 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 85,975 ஆக அதிகரித்தது.


latest tamil news



இன்று மட்டும் 91 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 3,060 ஆக அதிகரித்தது. கொரோனாவிலிருந்து இன்று 1,924 பேர் மீண்டனர். இதனையடுத்து மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39,314 ஆனது. 43,601 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பையில் புதிதாக 1,420 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து 48,774 ஆக உயர்ந்தது. இன்று மட்டும் 1,213 பேர் பலியாகினர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X