ரஷ்யாவில் ஒரே நாளில் 8,984 பேருக்கு கொரோனா| Russia reports 8,984 new coronavirus cases in a single day | Dinamalar

ரஷ்யாவில் ஒரே நாளில் 8,984 பேருக்கு கொரோனா

Updated : ஜூன் 07, 2020 | Added : ஜூன் 07, 2020
Share

மாஸ்கோ; ரஷ்யாவில் ஒரே நாளில் 8,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.



latest tamil news



இதையடுத்து அந்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,67,673 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 134 பேர் கொரோனாவுக்கு பலியானதையடுத்து இதுவரை கொரோனாவுக்கு மொத்தம் 5,859 பேர் பலியாகி உள்ளனர்.


latest tamil news



உலக அளவில் கொரோனா பாதிப்பில் ரஷ்யா மூன்றாவது இடத்தில் உள்ளது. இருப்பினும் பலி எண்ணிக்கை பாதிப்பை பொருத்தமட்டில் குறைவாக உள்ளது. இது வரை அந்நாட்டில் மொத்தம் 2,26,731 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்ததாக அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X