13 மணி நேரம் அலைக்கழிக்கப்பட்ட கர்ப்பிணி ஆம்புலன்சிலேயே உயிரிழப்பு| Pregnant woman dies in ambulance after 13-hour search for hospital bed | Dinamalar

13 மணி நேரம் அலைக்கழிக்கப்பட்ட கர்ப்பிணி ஆம்புலன்சிலேயே உயிரிழப்பு

Updated : ஜூன் 07, 2020 | Added : ஜூன் 07, 2020 | கருத்துகள் (17)
Share
நொய்டா: பிரசவம் பார்க்க மறுத்து 13 மணி நேரம் அலைக்கழிக்கப்பட்ட 8 மாத கர்ப்பிணியும் வயிற்றில் இருந்தா குழந்தையும், ஆம்புலன்சிலேயே பலியான சோகம் உ.பி.,யில் நடந்தது.உ.பி., மாநிலம் நொய்டா - காசியாபாத் எல்லையில் உள்ள கோடா காலனி பகுதியை சேர்ந்தவர் விஜேந்தர் சிங்(30). 8 மாத கர்ப்பிணியான இவரது மனைவி நீலம்(30) பிரசவ வலியில் துடிக்க, கர்ப்ப காலத்தில் பார்த்து வந்த தனியார் மருத்துவமனைக்கு
Pregnant Woman, Dies, Ambulance, UP, கர்ப்பிணி, ஆம்புலன்ஸ், உயிரிழப்பு

நொய்டா: பிரசவம் பார்க்க மறுத்து 13 மணி நேரம் அலைக்கழிக்கப்பட்ட 8 மாத கர்ப்பிணியும் வயிற்றில் இருந்தா குழந்தையும், ஆம்புலன்சிலேயே பலியான சோகம் உ.பி.,யில் நடந்தது.

உ.பி., மாநிலம் நொய்டா - காசியாபாத் எல்லையில் உள்ள கோடா காலனி பகுதியை சேர்ந்தவர் விஜேந்தர் சிங்(30). 8 மாத கர்ப்பிணியான இவரது மனைவி நீலம்(30) பிரசவ வலியில் துடிக்க, கர்ப்ப காலத்தில் பார்த்து வந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஆனால் அங்கு கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதால், கர்ப்பிணியை அனுமதிக்க மறுத்தனர்.


latest tamil news


இவ்வாறு 8 மருத்துவமனைகளில் அனுமதி மறுக்கப்பட்ட கர்ப்பிணி, 13 நேர அலைக்கழிப்புக்கு பின், ஆம்புலன்சிலேயே உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது. உயிரிழந்த கர்ப்பிணிக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம், டில்லி, உ.பி.,யில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கவுதம புத்தா நகர் மாவட்ட கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X