கொரோனா மருந்து கசப்பை மறக்க மாணவர்களுக்கு லாலிபாப் திட்டம்: அமைச்சர் பதவி காலி| Coronavirus: Madagascar minister fired over $2m lollipop order | Dinamalar

கொரோனா மருந்து கசப்பை மறக்க மாணவர்களுக்கு லாலிபாப் திட்டம்: அமைச்சர் பதவி காலி

Updated : ஜூன் 07, 2020 | Added : ஜூன் 07, 2020 | கருத்துகள் (4)
Share
அன்டனன்அரிவோ: மாணவர்களுக்கு வழங்கப்படும் கொரோனா மருந்து கசப்பினை மறக்க லாலிபாப் திட்டம் கொண்டு வந்த மடகாஸ்கர் அமைச்சர் பதவி காலியானது.ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டில் கோவிட் ஆர்கானிக்ஸ் என்ற கசப்பான மருந்து மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் அந்நாட்டு

அன்டனன்அரிவோ: மாணவர்களுக்கு வழங்கப்படும் கொரோனா மருந்து கசப்பினை மறக்க லாலிபாப் திட்டம் கொண்டு வந்த மடகாஸ்கர் அமைச்சர் பதவி காலியானது.latest tamil newsஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டில் கோவிட் ஆர்கானிக்ஸ் என்ற கசப்பான மருந்து மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அந்நாட்டு கல்வித்துறை அமைச்சர் ரிஜாசோவா ஆண்ட்ரியமனனா என்பவர், மாணவர்கள் சாப்பிடும் கொரோனா மருந்தின் கசப்புத் தன்மையை மறக்க லாலிபாப் வழங்கப்படும் என்று அறிவித்தார்.


latest tamil newsஇதற்காக இத்திட்டத்திற்கு இந்திய மதிப்பில் ரூ 15 கோடி செலவிடப்படும் என்றும் அறிவித்தார். இத்திட்டத்தினை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்நாட்டு அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா லாலி பாப் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்வி அமைச்சர் ரிஜாசோவாவை பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார்.


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X