பொது செய்தி

இந்தியா

திருமலை ஏழுமலையான் தரிசன டிக்கெட்: 'ஆன்லைன்' முன்பதிவு இன்று துவக்கம்

Updated : ஜூன் 08, 2020 | Added : ஜூன் 07, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Tirumala Tirupati Devasthanams, tirupati balaji, online bookings, coronavirus lockdown, temples open, திருமலை, ஏழுமலையான், தரிசன டிக்கெட், ஆன்லைன்,முன்பதிவு

திருப்பதி; திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்கு, 'ஆன்லைன்' வாயிலாக, டிக்கெட் முன்பதிவு செய்வது, இன்று முதல் துவங்க உள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால், மார்ச், 20 முதல், திருமலையில் ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. 80 நாட்களுக்கு பின், மத்திய, மாநில அரசுகள் உத்தரவுப்படி, இன்று முதல் தரிசனம் துவங்க உள்ளது. முதல் இருநாட்கள் தேவஸ்தான ஊழியர்களும், அடுத்த நாள் திருமலையில் வசிக்கும் உள்ளூர்வாசிகளும், சோதனை முறையில், ஏழுமலையான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். வரும்,11 தேதி முதல், மற்ற பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.


latest tamil news




அதற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் துவங்குகிறது. பக்தர்கள், tirupatibalaji.ap.gov.in என்ற, இணையதளம் வாயிலாக, தங்கள் தரிசன டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். தினமும், 3,000 டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்யப்படும்.தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யும் பக்தர்கள், தங்களுக்கான தங்கும் அறைகளையும் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யலாம்.

முன்பதிவு செய்யும் போது, ஆதார் எண் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை எண் என, ஏதேனும் ஒன்றை குறிப்பிட வேண்டும். கொரோனா வைரஸ் பரவல் அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் சிகப்பு மண்டல பகுதிகளைச் சேர்ந்தவர்கள், தரிசன டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது. வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள், ஆந்திராவிற்குள் நுழைய, 'இ- - பாஸ்' கட்டாயம் பெற வேண்டும். டிக்கெட் பெற்றவர்கள் மட்டுமே, அலிபிரி சோதனை சாவடிக்கு செல்ல அனுமதிக்கப்படுவர்.

'எஸ்.எம்.எஸ்.,' முறைதிருமலை திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள மற்ற கோவில்களில், சுவாமி தரிசனம் செய்யவும், tirupatibalaji.ap.gov.in என்ற, இணைய தளம் வாயிலாக பக்தர்கள், 'டோக்கன்' பெறலாம். அல்லது, 9321033330 என்ற எண்ணிற்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பி, தரிசன டோக்கன் பெறலாம். அனைத்து கோவில்களிலும், தெர்மல் ஸ்கேனிங் வாயிலாக, பரிசோதிக்கப்பட்ட பிறகே, சுவாமி தரிசனத்திற்கு, பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.தரிசனத்திற்கு செல்லும் அனைவரும், முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என, தேவஸ்தானம் தெரிவித்துஉள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mariyappangopinathan - Chennai,இந்தியா
08-ஜூன்-202011:54:49 IST Report Abuse
mariyappangopinathan இரண்டு மாதத்திற்கு பிறகு கோயிலுக்கு செல்வதால் மக்கள் அங்கே வாங்கும் எந்த ஒரு பொருளையும் கவனமாக பார்த்து வாங்க வேண்டும். காலம் கடந்த பொருட்கள் (எஸ்பிரி தேதி) விற்பனை செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. சமூக இடைவெளி விட்டு கோவிந்தா தரிசனம் செய்யவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X