அரசியல் செய்தி

தமிழ்நாடு

தொடர் போராட்டம் தி.மு.க., தீர்மானம்

Updated : ஜூன் 09, 2020 | Added : ஜூன் 07, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
சென்னை:'பொய் வழக்கு போடும் அராஜக நடவடிக்கையை, அமைச்சர் வேலுமணி உடனே நிறுத்தாவிட்டால், தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்' என, கோவை மாவட்ட, தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதுகுறித்த, தி.மு.க., தலைமையின் அறிக்கை:ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க., நிர்வாகிகளுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
தொடர் போராட்டம் தி.மு.க., தீர்மானம்

சென்னை:'பொய் வழக்கு போடும் அராஜக நடவடிக்கையை, அமைச்சர் வேலுமணி உடனே நிறுத்தாவிட்டால், தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்' என, கோவை மாவட்ட, தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்த, தி.மு.க., தலைமையின் அறிக்கை:ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க., நிர்வாகிகளுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, கோவை மாவட்டத்தில், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, அனைவருக்கும், அனைத்திற்கும், சட்டாம்பிள்ளையாக மாறி உள்ளார். அவருடைய விருப்பு வெறுப்புக்கேற்ப, மக்களாட்சி மாண்புகளை காவு கொடுத்து, கோவை மாவட்டத்தை தீவாக நினைத்து, தனியாட்சி நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது.

ஜனநாயக கடமை மற்றும் நெறிமுறைப்படி, மக்கள் கடமையாற்றும் தி.மு.க.,வினர் மீது, போலீஸ் துறையை ஏவி, பொய் வழக்கு போடும் அராஜக நடவடிக்கையை, அமைச்சர் வேலுமணி மேற்கொண்டுள்ளார். இந்த நடவடிக்கைகளை, உடனே நிறுத்தாவிட்டால், அதற்கான தொடர் போராட்டங்களை, அவர் சந்திக்க நேரிடும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
09-ஜூன்-202017:39:11 IST Report Abuse
sankar இதுமாதிரி வார்த்தை ஜால அரசியல் எல்லாம் இனி செல்லாது தம்பி - மக்களுக்கு எல்லாம் தெரியும்
Rate this:
Cancel
ravi - chennai,இந்தியா
08-ஜூன்-202017:08:12 IST Report Abuse
ravi இவர் தன்னுடன் விஞ்ஞானிகள் வைத்திருக்கவில்லை - போராட்டம் செய்ய ரௌடிகள் அல்லக்கைகள் தான் இருக்கிறார்கள். இதில் என்ன பெருமை இவருக்கு.
Rate this:
Cancel
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
08-ஜூன்-202016:48:57 IST Report Abuse
SAPERE AUDE சரி. அடுத்த போராட்டத்திற்கு தயாராகி வீரர்களை தயாராக்குகிக்றார் தளபதி. இது தொடர் போராட்டம் வேறு !இனி பத்திரிகைகளுக்கு கொண்டாட்டம்தான். பக்கங்களை நிறப்ப பஞ்சம் இருக்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X