சீனியர் அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி 'கல்தா?'

Updated : ஜூன் 08, 2020 | Added : ஜூன் 08, 2020 | கருத்துகள் (23)
Advertisement
புதுடில்லி : பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு, இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்து, ஓராண்டு முடிந்து விட்டது. இந்த சமயத்தில், மத்திய அமைச்சரவையை மாற்றி அமைக்க, மோடி திட்டமிட்டிருந்தார். ஆனால், கொரோனா பரவலால் இது தடைபட்டு போனது. ஆனாலும், அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள், அமைச்சரவை மாற்றம் இருக்கும் என, சீனியர் தலைவர்கள் கூறுகின்றனர்.இது தொடர்பாக, பிரதமர்
PM modi, Modi, cabinet reshuffle, பிரதமர், மோடி, அமைச்சர், கல்தா

புதுடில்லி : பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு, இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்து, ஓராண்டு முடிந்து விட்டது. இந்த சமயத்தில், மத்திய அமைச்சரவையை மாற்றி அமைக்க, மோடி திட்டமிட்டிருந்தார். ஆனால், கொரோனா பரவலால் இது தடைபட்டு போனது. ஆனாலும், அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள், அமைச்சரவை மாற்றம் இருக்கும் என, சீனியர் தலைவர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக, பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஆலோசித்து, சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளனராம். இந்த அமைச்சரவை மாற்றத்தில், சீனியர் அமைச்சர்கள் சிலருக்கு, 'கல்தா' கொடுக்கப்படும் என, சொல்லப்படுகிறது. யார் யாரிடம் இரண்டு அமைச்சகங்களின் பொறுப்பு உள்ளதோ, அவர்களிடமிருந்து ஒரு துறை பறிக்கப்படலாம்.


latest tamil news


சில அமைச்சர்களின் செயல்பாடு சரியில்லை என்பதால், அவர்கள் நீக்கப்பட்டு, கட்சி பொறுப்பு தரப்படுமாம். இந்த வகையில், சட்டம் மற்றும் ஐ.டி., துறைகளை கவனித்து வரும் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ஆகியோர் மாற்றப்படுவர் என, கூறப்படுகிறது. பிரதமர் மோடி, அரசியல்வாதிகளை தவிர்த்து, ஓய்வு பெற்ற மூத்த அதிகாரிகளை, புதிய அமைச்சர்களாக நியமிக்க விரும்புகிறாராம். அவர்கள், எந்தவித அரசியல் நெருக்கடியும் இல்லாமல் பணியாற்றுவர் என்பது முக்கிய காரணம்.

தற்போது அமைச்சர்களாக உள்ள ஹர்தீப் சிங் பூரி மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர், முன்னாள் ஐ.எப்.எஸ்., அதிகாரிகள். இவர்கள், அமைச்சர் பொறுப்புகளை மிகச் சிறப்பாக கவனித்து வருகின்றனர். பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் முடிந்ததும், செப்டம்பர் மாதம் அமைச்சரவை மாற்றம் இருக்குமாம்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
09-ஜூன்-202008:52:51 IST Report Abuse
skv srinivasankrishnaveni முன்னாள் அதிகாரிகள் ஓகே ஆனால் அவங்க கரப்ஷன் இல்லாத லஞ்சம்னா என்னான்னே தெரியாத நேர்மையாளர்களாயிருக்கவேண்டும் தமிழ்நாடு ஆந்திரா மஹாராஷ்ட்ரா கர்நாடகாலே தூஉய்மை யானவா கிடைப்பது ரரொம்பவே கஷ்டம் அவ்ளோகேவலமானவா 908%
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
08-ஜூன்-202019:47:58 IST Report Abuse
Rajas இப்போதைய மத்திய அமைச்சர்களின் திறன் Evaluate செய்யப்பட்டால் மைனஸ் மார்க் தான் வரும். அவ்வளவு திறமை மிக்கவர்கள். இவர்களை அமைச்சர் பதவிகளில் வைத்திருப்பதால் அதிகாரிகள் கூட சரியாக செயல்பட முடிவதில்லை. எப்படி இவ்வளவு நாட்கள் பதவியில் இருக்கிறார்கள் என்பது ஆச்சர்யம்.
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
08-ஜூன்-202019:43:41 IST Report Abuse
Rajas மோடி முதல் முறையாக பதவி ஏற்றபோதே, ஜூன் 2 , 2014 ல் இது பற்றி பல பத்திரிகைகளில் செய்தி வந்தது. வருடத்திற்கு ஒரு முறை அமைச்சர்களின் திறன் evaluate செய்யப்போவதாக செய்தி வந்தது. இதற்க்காக கேபினட் செகிரேட்டரி நியமனம் செய்யப்பட்டார். அதன் பின் அதை பற்றி நினைத்தே பார்க்கவில்லை. திரும்பவும் ஜனவரி 2020 அதை பற்றி பேசினார்கள். இன்னமும் ஒன்றும் நடக்கவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X