பா.ஜ., தலைவருடன் திமுக எம்.பி.,க்களின் ரகசிய சந்திப்பு

Updated : ஜூன் 08, 2020 | Added : ஜூன் 08, 2020 | கருத்துகள் (56)
Share
Advertisement
புதுடில்லி: டில்லி பா.ஜ., வட்டாரங்களில், தமிழகம் தொடர்பான ஒரு விவகாரம் பரபரப்பாக அலசப்படுகிறது. தி.மு.க., - எம்.பி.,க்கள் இருவர், மூத்த பா.ஜ., தலைவரை சந்திதுள்ளனராம். இந்த சந்திப்பு, இரு முறை நடந்ததாக சொல்லப்படுகிறது.தமிழக அரசியல் குறித்து, இந்த சந்திப்பில் பேசப்பட்டதாம். இவர்களில், ஒரு எம்.பி., தான் நடத்தி வரும் தொழில் தொடர்பாகவும், அந்த பா.ஜ., தலைவருடன் ஆலோசனை நடத்தினாராம்.
DMK, BJP, Bharatiya Janata Party, politics, tamil nadu elections, tn elections, tamil news,பாஜ, திமுக

புதுடில்லி: டில்லி பா.ஜ., வட்டாரங்களில், தமிழகம் தொடர்பான ஒரு விவகாரம் பரபரப்பாக அலசப்படுகிறது. தி.மு.க., - எம்.பி.,க்கள் இருவர், மூத்த பா.ஜ., தலைவரை சந்திதுள்ளனராம். இந்த சந்திப்பு, இரு முறை நடந்ததாக சொல்லப்படுகிறது.

தமிழக அரசியல் குறித்து, இந்த சந்திப்பில் பேசப்பட்டதாம். இவர்களில், ஒரு எம்.பி., தான் நடத்தி வரும் தொழில் தொடர்பாகவும், அந்த பா.ஜ., தலைவருடன் ஆலோசனை நடத்தினாராம். இந்த் திடீர் சந்திப்பு, டில்லி அரசியல் வட்டாரங்களை பரபரப்பாக்கியுள்ளது. இந்த இரண்டு எம்.பி.,க்களில் ஒருவர், ஒரு முக்கிய துறையை கவனிக்கும் அமைச்சரையும் சந்தித்துள்ளாராம்.


latest tamil news


சமீபத்தில், தமிழக பா.ஜ., தலைவர் முருகனை சந்தித்த, வி.பி.துரைசாமியை கட்சியிலிருந்து நீக்கினார், தி.மு.க., தலைவர் ஸ்டாலின். உடனே, பா.ஜ.,வில் சேர்ந்து விட்டார் துரைசாமி. அதே போல, எம்.பி.,க்கள் மீதும் நடவடிக்கை பாயுமா என அலசப்பட்டு வருகிறது. 'எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், ஆளும் கட்சி தலைவர்களையும், மத்திய அமைச்சர்களையும் சந்திப்பது, டில்லியில் சகஜம்.

தொகுதி தொடர்பான விஷயங்கள், தமிழகத்தில் புதிய திட்டங்களை நிறைவேற்றுவது உள்ளிட்ட ஏதாவது விஷயம் இருக்கலாம். 'எனவே, இந்த சந்திப்பை பெரிதுபடுத்தக் கூடாது' என, ஒரு தரப்பில் சொல்கின்றனர். 'தொகுதி குறித்த சந்திப்பு என்றால், வெளிப்படையாக இருக்க வேண்டியது தானே; எதற்கு ரகசியம்' என கிண்டல் அடிக்கும் பா.ஜ.,வினர், அந்த இரண்டு எம்.பி.,க்களும் முன்னாள் மத்திய அமைச்சர்கள் என்றும் கொளுத்திப் போடுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
12-ஜூன்-202016:11:17 IST Report Abuse
Endrum Indian குடெல்லாம் ஒரு சின்ன டீல் தான் நமக்கு இதை செய்தால் உனக்கு இவ்வளவு தள்ளுகிறேன் அவ்வளவு தானே டீல்.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
09-ஜூன்-202008:10:07 IST Report Abuse
Sampath Kumar ஓஹோ சூர்யன் தாமரையை நோக்கி வருதா ??? உங்க கும்பல் இலையை கழுவி ஆச்சு போல ??
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
08-ஜூன்-202018:52:03 IST Report Abuse
Girija பி ஜெ பி வேஸ்ட்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X