மஹாராஷ்டிராவில் யார் முதல்வர்? உத்தவா அல்லது பவாரா?

Updated : ஜூன் 08, 2020 | Added : ஜூன் 08, 2020 | கருத்துகள் (36)
Share
Advertisement
Maharashtra, Sharad Pawar, Uddhav Thackeray, சரத் பவார், உத்தவ்,உத்தவ் தாக்கரே

மும்பை: சிவசேனாவின், உத்தவ் தாக்கரே, மஹாராஷ்டிராவில் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வர படாதபாடு பட்டு, முதல்வராகவும் பொறுப்பேற்றார். காங்கிரசை எதிர்த்து, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற சிவசேனா, இப்போது காங்., - தேசியவாத காங்கிரசோடு கைகோர்த்து ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது.

தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், அடிக்கடி உத்தவ் தாக்கரேவை சந்தித்து, பல ஆலோசனைகளை வழங்கி வருகிறார். பவார் எந்த அரசு பதவியில் இல்லாவிட்டாலும், ஆட்சியில் இவரின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. சமீபத்தில், மஹாராஷ்டிராவை புயல் தாக்கியது. உடனே, சரத் பவார் வழக்கம் போல, முதல்வர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து, 'என்ன செய்ய வேண்டும்; எப்படி செயல்பட வேண்டும்' என, பல ஆலோசனைகளை கூறினார்.


latest tamil news


வழக்கமாக இப்படிப்பட்ட விவகாரங்களை, அமைச்சரவை தான் அலசும்.இதன் பின், பல உத்தரவுகளை பிறப்பித்தார் முதல்வர் உத்தவ் தாக்கரே. தன் கட்சியினருக்கு, 'புயல் நிவாரண பணிகளில் உடனடியாக செயல்பட வேண்டும்' என, உத்தரவிட்டார் பவார். இது, சிவசேனா கட்சிக்குள் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் பதவியில் இருப்பது, உத்தவா அல்லது பவாரா என, பட்டிமன்றமே நடைபெறுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
08-ஜூன்-202020:40:24 IST Report Abuse
skv srinivasankrishnaveni போயும்போயும் உத்தவிக்கிந்த பதவியை தந்தானே ஒன்னம்நம்பர் உதவாக்கறே இவனை வச்சு ஆதாயம் பாப்பரப்பாரு அந்த சரத்துபவர்
Rate this:
Cancel
SELF -  ( Posted via: Dinamalar Android App )
08-ஜூன்-202019:45:47 IST Report Abuse
SELF இதில் இதுவும் தவறு இல்லை. உத்தவ் தாக்கரே தொழிலுக்கு புதியவர் அனுபவம் கிடையாது எனவே சரத்பவாரின் வழிகாட்டுதல் நல்ல அரசாட்சிக்கு உதவும்.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
08-ஜூன்-202018:35:23 IST Report Abuse
S. Narayanan அமெரிக்கா நிலைமை தான் இங்கயும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X