பொது செய்தி

தமிழ்நாடு

வாடகை ரூ.4.20 லட்சம் வேண்டாம்: வியாபாரிகளுக்கு டாக்டர் இன்ப அதிர்ச்சி

Updated : ஜூன் 08, 2020 | Added : ஜூன் 08, 2020 | கருத்துகள் (73)
Share
Advertisement
தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில், 91 வயதாகும் டாக்டர் ஒருவர், தனக்கு சொந்தமான கட்டடத்தில், கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகளிடம், மூன்று மாத வாடகை பணம், 4.20 லட்சம் ரூபாய் வேண்டாம் என்று கூறி, மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி உள்ளார்.தஞ்சாவூர், பட்டுக்கோட்டையை சேர்ந்த டாக்டர் கனகரத்தினம், 91. இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு, மூன்று மகள்கள், ஒரு மகன். மகன் சுவாமிநாதன் மற்றும் மருமகள்
coronavirus, covid 19, corona, coronavirus lockdown,தஞ்சாவூர், டாக்டர், வாடகை, கடை, இன்ப அதிர்ச்சி,

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில், 91 வயதாகும் டாக்டர் ஒருவர், தனக்கு சொந்தமான கட்டடத்தில், கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகளிடம், மூன்று மாத வாடகை பணம், 4.20 லட்சம் ரூபாய் வேண்டாம் என்று கூறி, மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி உள்ளார்.

தஞ்சாவூர், பட்டுக்கோட்டையை சேர்ந்த டாக்டர் கனகரத்தினம், 91. இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு, மூன்று மகள்கள், ஒரு மகன். மகன் சுவாமிநாதன் மற்றும் மருமகள் வர்ஷாவும் டாக்டராக உள்ளனர். கனகரத்தினம், தனக்கு சொந்தமான இடத்தில், ஆறு கடைகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார்.

ஊரடங்கு காலத்தில் கடைகள் பூட்டப்பட்டிருந்தன. வியாபாரம் இல்லாத நிலையில், ஆறு கடைகளுக்கும் மாதம், 1.40 லட்சம் ரூபாய் வீதம், மார்ச், ஏப்ரல், மே ஆகிய, மூன்று மாதங்களுக்கான, ௪.20 லட்சம் ரூபாய் வாடகையை தர வேண்டாம் என தெரிவித்து, வியாபாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.இந்த மனிதநேய செயலை, அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.


latest tamil newsடாக்டர் கனகரத்தினம் கூறுகையில், ''கொரோனா நிவாரண நிதியாக, முதல்வர் நிவாரண நிதிக்கு, 1 லட்சம் ரூபாய் வழங்கினேன். ''வியாபாரிகள் கஷ்டப்படும் போது, அதை புரிந்து கொண்டு, அவர்களுக்கு உதவி செய்வோம் என்று, மூன்று மாதங்களுக்கு வாடகை தர வேண்டாம்,'' என்றார்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: தன்னிடம் சிகிச்சைக்கு வருபவர்களிடம் இன்று வரை, 10 ரூபாய் மட்டுமே பீஸ் வாங்குகிறார். சிகிச்சை வருபவர்களை உறவாக நினைப்பவர். அதேவழியில் மகனும், மருமகளும், 50 ரூபாய் தான் பீஸ் வாங்குகின்றனர். இதுவரை அவர், 65 ஆயிரம் பிரசவம் பார்த்துள்ளார். இந்தியா, சீனா போர் நடந்த போது, போர் தளவாடங்கள் வாங்குவதற்காக, தன் மகள்களின் திருமணத்துக்காக சேமித்து வைத்திருந்த, 83 சவரன் தங்க நகையை, மத்திய அரசிடம் கொடுத்தவர். நாட்டையும், மக்களையும் நேசிக்கக் கூடியவர். அப்படிப்பட்டவர் எங்களுக்கு உதவியது, பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
08-ஜூன்-202022:36:51 IST Report Abuse
adalarasan பெரியவருக்கு கோடி வணக்கங்கள்
Rate this:
Cancel
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் சரியாக சொல்ல வேண்டுமானால் சிவாஜி பாத்திரம் அறிந்து பிச்சை போட்டவர் -சாரி பேருதவிகளை செய்தவர் கொஞ்சமும் விளம்பரமே இல்லாமல் நிலைத்து நிற்கும் பலவற்றை குறிப்பிடலாம் இங்கு வேண்டாம்
Rate this:
Cancel
G.MUTHIAH - Tamil Nadu,இந்தியா
08-ஜூன்-202019:18:42 IST Report Abuse
G.MUTHIAH நீங்கள் செய்துவரும் உதவியும்,தொண்டும் மக்களுக்கு இறைவனா இருக்கிறார்கள். உங்கள் பணி சிறக்க , நலன்கள் பெற்று நீடுழி வாழ மக்கள் அனைவரும் இறைவனை வேண்டுகின்றோம்,வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X