பொது செய்தி

தமிழ்நாடு

நடிகர் வரதராஜனின் வீடியோ வைரலானது: குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மறுப்பு

Updated : ஜூன் 08, 2020 | Added : ஜூன் 08, 2020 | கருத்துகள் (43)
Share
Advertisement
வரதராஜன், சுகாதார அமைச்சர், விஜயபாஸ்கர், கொரோனா, படுக்கைகள், அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை,  நடவடிக்கை, Coronavirus, corona, covid-19, coronavirus outbreak, corona update, corona treatment, hospital, private hospital, government hospital, lack of facility, actor and journalist Varadarajan, TN news, Tamil Nadu, chennai, health minister, vijayabhaskar, TN health minister

சென்னை: சென்னையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் குறைவாக உள்ளதாக நடிகரும், பத்திரிகையாளருமான வரதராஜனின் குற்றச்சாட்டை சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சென்னையில் மாநகராட்சி அதிகாரிகளுடன் அமைச்சர்கள் குழுவினர் ஆலோசனை நடத்திய பின்னர், அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்தனர்.
அமைச்சர் விஜயபாஸ்கர் கெரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக நடந்து வருகிறது. ஆனால் சிலர் விமர்சனம் செய்கின்றனர். இது தவறு என்றார்.
நடிகர் வரதராஜன் பேசிய வீடியோ குறித்து நிருபர்கள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ; அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் தட்டுப்பாடு இல்லை. இது தவறான தகவல். குறை சொல்ல வேண்டாம். விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். அவர் எந்த மருத்துவமனையில் பார்த்தால் என்பதை சொல்ல வேண்டும். நேரில் வந்து பார்க்க நான் தயார். அரசு நிலை குறித்து தவறான தகவல் பரப்பாதீர்கள். வரதராஜன் மீது பெருந்தொற்று நோய்த்தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.


latest tamil newsவரதராஜனை அழைத்து சென்று, டாக்டர், சுகாதார பணியாளர்களின் பணியை காட்ட தயார். வதந்தி பரப்பினால், அரசு வேடிக்கை பார்க்காது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா தடுப்பில் கடும் நெருக்கடியில்அரசு செயல்படும் சூழலில் வதந்தி பரப்பக்கூடாது. கொரோனா தடுப்பு பணிகளில் ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றுகின்றனர். ஆதாரம் இல்லாத எந்த தகவலையும் பரப்ப வேண்டாம். கண்ணுக்கு தெரியாத வைரசை எதிர்த்து போராடும் நிலையில் விமர்சனங்கள் வேண்டாம்.

சென்னையில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் 5 ஆயிரம் படுக்கைகள் உள்ளன. தமிழகத்தில், தனிமைபடுத்தப்பட்ட வார்டுகளில் போதுமான படுக்கைகள் உள்ளன. படுக்கைகளுக்கு தட்டுப்பாடு இல்லை. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தமிழகத்தில் அனைத்து வசதிகளும் உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தும்படி கூறி வருகிறோம்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.


வரதராஜனின் வீடியோ:முன்னதாக நடிகரும் செய்தி வாசிப்பாளருமான வரதரராஜன் பேசிய ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதில்; " எனது நண்பர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் போதிய அளவு இல்லை. மக்கள் கொரோனா வராமல் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
அமைச்சர் பேட்டிக்கு பின் வரதராஜன் வெளியிட்ட வீடியோவில் நான் அரசு குறித்து குறைகூறும் நோக்கத்தில் எதையும் செய்யவில்லை. எனது நண்பருக்கு அனுப்பிய வீடியோவை யாரோ சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். எனக்கு அரசு மீது குற்றம் சொல்லும் எண்ணம் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MPK - Chennai,இந்தியா
09-ஜூன்-202015:23:47 IST Report Abuse
MPK அவர் நண்பர் ஒருவருக்கு அனுப்பிய செய்தியை திமுக ஆதரவு ஊடகங்கள் பெரிதுபடுத்தி அரசுக்கு கலங்கம் ஏற்படுத்தப்பட்ட முயற்சித்தவனுக்கும் தூண்டிவிட்ட ஒளிபரப்பு செய்த திமுக ஆதரவு ஊடகங்களுக்கு வரதராஜன் பதில் ஒரு ...
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
09-ஜூன்-202002:26:55 IST Report Abuse
மலரின் மகள் வாட்ஸாப்ப் செய்திகள் தனிப்பட்டவர்களுக்குள் தனியாக பதிவிடப்பட்டவை தான். அதை போர்வர்து செய்பவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்புகின்ற செய்திகள். அதில் இருப்பதை கொண்டு சமூக வெளியில் அவர் அரசி குறை கூறிநார் என்று சொல்வதை ஏற்பதற்கில்லை. மனக்குறை அவரது நெருங்கிய வட்டத்திலி உள்ளோர் பட்ட சிரமங்களை சொல்லி தனது நட்பு சொந்த வாட்டர்களில் உள்ளோரை எச்சரிக்கை செய்திருக்கிறார். முகநூல் த்விட்டேர் போன்ற சமூக வலைத்தளங்களில் இதை அவர் செய்ததாக தெரியவில்லை. வாட்சப்பில் தனது நண்பர்களுக்கு அனுப்பி அவர்களுக்கு அறிவுரை செய்திருக்கிறார். இதை செய்தியாளர்கள் கேட்டதால் அமைச்சர் ரியாக்ட் செய்திருக்கிறார் என்று தெரிகிறது. குற்றமாக இருப்பதாக தெரியவில்லை, அப்படியே குற்றமாக இருந்தாலும் நினைத்தாலும் தண்டிக்கக்கூடியதா தெரியவில்லை, தண்டனைக்குரியது என்று அரசு நினைத்தால் அது மன்னித்து விட கூடியது. மனிதர் தவறிழைப்பவர் அல்ல. என்பது உண்மைதானே.
Rate this:
Cancel
Sundaram Bhanumoorthy - coimbatore,இந்தியா
08-ஜூன்-202020:14:56 IST Report Abuse
Sundaram Bhanumoorthy Complete lock down for another three months is only the solution. Today chepauk MLA j.anbalagan is in serious condition. When we don't have enough medical facilities, we public should safeguard ourselves.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X