நிஜக்கதை:கொரோனாவால் திருந்தினேன்.

Updated : ஜூன் 08, 2020 | Added : ஜூன் 08, 2020 | கருத்துகள் (1)
Advertisement
ஒரு நாளைக்கு ஐந்தாறு முறை டாஸ்மாக்கை தேடிச் சென்று குடித்துக் கொண்டு இருந்த நான் கொரோனா காலத்தில் குடியை மறந்தேன் இப்போது குடும்பத்தோடு மகிழ்சியாக இருக்கிறேன் குடிப்பழக்கத்தை விடுவதற்கு எதுவும் தேவை இல்லை மனம் இருந்தால் போதும் என்கிறார் பொள்ளாச்சியில் வேன் டிரைவராக இருக்கும் லோகநாதன்.பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் வேன் டிரைவராக இருப்பவர் அங்குராஜ்latest tamil news


ஒரு நாளைக்கு ஐந்தாறு முறை டாஸ்மாக்கை தேடிச் சென்று குடித்துக் கொண்டு இருந்த நான் கொரோனா காலத்தில் குடியை மறந்தேன் இப்போது குடும்பத்தோடு மகிழ்சியாக இருக்கிறேன் குடிப்பழக்கத்தை விடுவதற்கு எதுவும் தேவை இல்லை மனம் இருந்தால் போதும் என்கிறார் பொள்ளாச்சியில் வேன் டிரைவராக இருக்கும் லோகநாதன்.
பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் வேன் டிரைவராக இருப்பவர் அங்குராஜ் தீவிர தினமலர் வாசகர் கடந்த சில தினங்களுக்கு முன் தினமலர் இதழில் வெளிவந்த ‛ஆடுவோமோ தண்ணி போடுவோமோ' என்ற டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிரான எனது கட்டுரையை படித்துவிட்டு என்னிடம் பேசினார்.பேசும்போது இந்த டாஸ்மாக் கடையை மூடியதால் நிறைய பேர் திருந்தியுள்ளனர் அவர்களில் எனது சக டிரைவர் லோகநாதனும் ஒருவர் எப்போது பார்தாலும் யாரிடமாவது காசு கடன் வாங்கிக்கொண்டு போய் குடித்துவிட்டு வருவார் ஆனால் இந்த இரண்டு மாதமாக குடிக்காமல் இருப்பது மட்டுமல்ல குடும்பத்திற்கு செலவு கொடுத்தது போக தனது கையில் இருபத்தையாயிரம் ரூபாய் மிச்சமாக வைத்துள்ளார் இது ஒரு அதிசயம் அவரிடம் பேசுங்கள் என்றார்.
லோகநாதனும் பேசினார்.


latest tamil news


நான் கோவை பக்கத்தில் உள்ள கவுண்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவன் இப்போது 51 வயதாகிறது அதிகம் படிக்காதவன் சிறுவயதில் இருந்தே வாடகை வேன் டிரைவராக இருக்கிறேன் தற்போது பொள்ளாச்சியில் இருக்கிறேன் மனைவி இரண்டு பையன்கள்.
குடிப்பழக்கம் கடந்த இருபது வருடமாகவே இருந்தது அதுவும் கடந்த பத்து வருடங்களாக அளவு கடந்து போனது காலையில் எத்தனை மணிக்கு முழிப்பு வந்தாலும் உடனே குடிக்கவேண்டும் என்ற வேட்கை வந்துவிடும் இப்ப கடையை திறந்து இருப்பாங்களா? என்ற எண்ணம் மட்டுமே ஒடும். கடையை திறந்ததும் ஒரு குவார்ட்டர் வாங்கி குடித்த பிறகுதான் இயல்பு நிலையே வரும் அதன் பிறகு மதியம் மாலை இரவு என்று நாலைந்து குவார்ட்டர் ஒடிவிடும்.
வேன் ஒட்டி சம்பாதித்த பணம் முழுவதும் குடிக்கே சரியாகப் போய்விடும் பல நேரம் வீட்டில் சண்டை போட்டு பிடுங்கிக் கொண்டு போய் குடித்திருக்கிறேன் கடன் வாங்கிப் போய்க் குடிப்பேன் குடித்துவிட்டு சரியாக சாப்பிடவும் மாட்டேன் இப்படி கெட்டுப்போய் விட்டோமே என நினைத்து திருந்துவதற்காக மூலிகை சாப்பிட்டேன் அதுவும் சரிப்பட்டு வரவில்லை குடி தொடர்ந்தது.
இந்த சூழ்நிலையில்தான் கொரோனா காரணமாக டாஸ்மாக் அடைக்கப்பட்டது ஆரம்பத்தில் சில நாள் கஷ்டமாக இருந்தது பிறகு கடைதான் இல்லையே என்ன செய்யறது என்று வேலையில் கவனம் செலுத்தினேன் சில நாள் கழித்து ஒருவன் அண்ணாச்சி சரக்கு வேணுமா நுாற்று பதினைந்து ரூபாய் சரக்கு இருநுாற்று ஐம்பது என்றான் சரி என்று கொடுத்தேன் அவன் போய்விட்டு திரும்பவந்து முன்னுாறு ரூபாய் கொடுத்தால்தான் கிடைக்குமாம் என்றான்.
அந்த இருநுாற்றைம்பது கொடு என்று திரும்ப வாங்கி கொண்டு போய் வீட்டில் கொடுத்தேன் மனைவி மல்லிகா முகத்தில் அப்படியொரு சந்தோஷம் பிரமாதமாய் சமைத்து போட்டாள் வாழ்க்கையில் பசி எடுத்து ருசித்து சாப்பிட்டதும் அன்றுதான்.அதன்பிறகு எவ்வளவு ரூபாய்க்கு சரக்கு கிடைத்தாலும் சரி எப்பபோது கிடைத்தாலும் சரி குடிப்பதில்லை என்று முடிவு செய்தேன் நான் வண்டி ஒட்டி சம்பாதித்து வீட்டிற்கு கொடுத்தது போக இப்போது கையில் இருபத்தைந்தாயிரம் ரூபாய் ரொக்கமாக மிச்சம் வைத்துள்ளேன் இவ்வளவு பணம் என்னிடம் இருப்பது இதுதான் முதல் முறை.
துாக்கம் பிரமாதமாக வருகிறது நன்றாக பசி எடுக்கிறது மனைவியின் அளவிடமுடியாத அன்பை உணருகிறேன் பெரிய மகன் சந்தோஷப்பட்டு அடிக்கடி பேசுகிறான் சின்ன மகன் சொந்த வேன் வாங்கித்தருகிறேன் என்று சொல்லியிருக்கிறான் ஒரு பைசா கடன் கிடையாது சுற்றி இருப்பவர்கள் மிக மரியாதை கொடுக்கின்றனர் மிகுந்த அன்பாக பேசுகின்றனர்
இது அத்தனையும் நடந்ததற்கு ஒரே காரணம் குடியை விட்டதுதான் இதனால் நான் இப்போது என்ன செய்கிறேன் தெரியுமா? குடியை விட்டதனால் விளைந்த இத்தனை நன்மைகளையும் நண்பர்களுக்கு எடுத்துச் சொல்லி திருத்தி வருகிறேன் என்று உணர்வுபூர்வமாக பேசிய லோகநாதனிடம் பேசுவதற்காக எண்:78100 56582
-எல்.முருகராஜ்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh - Chennai,இந்தியா
12-ஜூன்-202009:54:13 IST Report Abuse
Ramesh தின
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X