வெடிபொருள் பழத்தை யானை தற்செயலாக சாப்பிட்டிருக்கலாமாம்

Updated : ஜூன் 10, 2020 | Added : ஜூன் 08, 2020 | கருத்துகள் (42)
Share
Advertisement
வெடிபொருள் பழத்தை யானை தற்செயலாக சாப்பிட்டிருக்கலாமாம்

புதுடில்லி :கேரளாவில், வெடி பொருட்கள் இருந்த அன்னாசி பழத்தை, பலியான யானை தற்செயலாக சாப்பிட்டிருக்கலாம் என, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

மின்வேலி அமைப்பது, பழத்தில் வெடிபொருள் நிரப்புவது ஆகியவை, உயிர்ப்பலியை ஏற்படுத்தும் எனத் தெரிந்தும், இதைச் செய்தது யார், இந்த சம்பவத்துக்கு, 'தற்செயல்' என்ற வார்த்தை பொருந்துமா என, இந்த அமைச்சகம் தான் பதில் சொல்ல வேண்டும்.கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள, அமைதி பள்ளத்தாக்கு பூங்காவை சேர்ந்த, 15 வயது கர்ப்பிணி யானை, வெடி பொருட்கள் இருந்த அன்னாசி பழத்தை சாப்பிட்டது.

அப்போது வெடி வெடித்ததால், அதன் வாய் பகுதி மற்றும் நாக்கு, பலத்த சேதம் அடைந்தது. இதற்கு ஒரு வாரத்திற்குப் பின், கடந்த, 27ல் யானை, அங்குள்ள வெள்ளியாற்றில் இறந்தது. யானை கொல்லப்பட்ட சம்பவம், நாடு முழுதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் நுழைவதை தடுக்க, வெடிபொருட்களை பழங்களில் வைப்பது குற்றச்செயல் என, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏற்கனவே பலமுறை எச்சரித்துள்ளது.



முதற்கட்ட விசாரணை



இதை மீறி நடந்த இந்த சம்பவத்தில், தீவிர நடவடிக்கை எடுக்க, கேரள அரசுக்கு உத்தரவிடப்பட்டது.இதுதொடர்பாக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் நேற்று பதிவிட்டு உள்ளதாவது:
யானை, வெடி பொருட்கள் வைக்கப்பட்ட அன்னாசி பழத்தை, தற்செயலாக சாப்பிட்டது, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றவாளிகளை பிடிக்க, மாநில அரசுக்கு விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்ட நிலையில், ஒருவர் கைதாகி உள்ளார்.யானையின் மரணத்திற்கு, அதிகாரிகள் காரணமாக இருந்திருந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கேரள அரசும், அமைச்சகத்துடன் தொடர்பில் உள்ள அனைத்து துறையினரும், இந்த பிரச்னையை, எவ்வித சார்பும் இன்றி நடுநிலையுடன் கையாள்கின்றனர்.

விசாரணையின் முடிவில், தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு, குற்ற செயலில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும். இதன் மூலம், எதிர்காலத்தில், இதுபோல் வன விலங்குகள் கொல்லப்படுவது, முழுமையாக தடுக்கப்படும்.யானையின் மரணம் தொடர்பாக, சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை, பொதுமக்கள் நம்ப வேண்டாம் என, சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர், பபுல் சுப்ரியோ கேட்டுக் கொண்டுள்ளார்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.




குடியிருப்பு பகுதிகள்



காடுகளை அழிக்கும் போக்கு அதிகரிப்பதால், வன விலங்குகள், குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன.இதைத் தடுக்க, மின் வேலி அமைப்பது உட்பட கொடுமையான செயல்கள், அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றப்படுகின்றன. அவற்றில், பழத்தில் வெடி வைப்பதும் ஒன்று என்று, இப்போதைய நிலைக்குக் கருத வேண்டி உள்ளது. இது, மிகக் கொடூரமான குற்றம். 'தற்செயல்' என்ற வார்த்தையை இதற்குப் பயன்படுத்துவது சரியா என்பது குறித்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL - tirumalai,இந்தியா
09-ஜூன்-202021:55:45 IST Report Abuse
SENTHIL அய்யா, ஆடு களவு போன மாதிரி நான் கனவுதான் கண்டேன்.... இந்தியா ஜனநாயக நாடு... வாழ்க ஜன நாயகம். வாழ்க ஓட்டுரிமை....
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
09-ஜூன்-202019:28:08 IST Report Abuse
Bhaskaran அதிகாரிங்க விலைக்கு போயிட்டாங்க போலிருக்கு
Rate this:
Cancel
09-ஜூன்-202019:17:53 IST Report Abuse
ஆப்பு வருஷா வருஷம் திருச்சூர் பூரம்னு 16 யானைகளை கூட்டியாந்து டார்ச்சர் குடுப்பாங்க. பாவமா இருக்கும்.
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
09-ஜூன்-202020:02:32 IST Report Abuse
தல புராணம்அது பண்ணலாம். தப்பில்லை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X