சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'அவ்வளவு தான் வித்தியாசம்!'

Added : ஜூன் 08, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 'அவ்வளவு தான் வித்தியாசம்!'

'அவ்வளவு தான் வித்தியாசம்!'

மதுரை திருப்பரங்குன்றத்தில், 'கொரோனா' ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி, சமீபத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற, அ.தி.மு.க., மதுரை கிழக்கு மாவட்ட செயலரும், எம்.எல்.ஏ.,வுமான, ராஜன் செல்லப்பா பேட்டியளித்தார்.அவர் கூறுகையில், 'தி.மு.க.,வினர் ஏற்படுத்திய மாயையை முறியடித்து, அ.தி.மு.க., வழங்கும் நிவாரணப் பொருட்களை, மக்கள் மனமுவந்து ஏற்றுக் கொள்கின்றனர். தி.மு.க., தலைவர், ஸ்டாலின், தன் மனதில் பட்டதையெல்லாம் அறிக்கையாக வெளியிட்டு வருகிறார்' என்றார். அங்கிருந்த நிருபர், 'தமிழக அரசு வழங்குவதெல்லாம், அ.தி.மு.க., கட்சி வழங்குகிறது என, கணக்கு காட்டுறாரோ... மனதில் பட்டதையெல்லம், ஸ்டாலின் அறிக்கை விடுகிறார் என்றால், அ.தி.மு.க.,காரங்க, வாயால் பேசுகின்றனர்... அவ்வளவு தான், ரெண்டு பேருக்கும் வித்தியாசம்...' என்றதும், சுற்றயிருந்தோர், அதை ஆமோதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
09-ஜூன்-202006:10:40 IST Report Abuse
D.Ambujavalli அடுத்த வீட்டு நெய்யே , என் பெண்டாட்டி கையே என்று அரசின் பணம் நிவாரணப் பொருளாகும், இவர்களுக்கு பிரசாரத்து உதவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X