சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

'உண்மையிலேயே திறமைசாலி

Added : ஜூன் 08, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 'உண்மையிலேயே திறமைசாலி

'உண்மையிலேயே திறமைசாலி

'இவரது நடவடிக்கைகளை பார்த்தால், முதல் முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்தவர் போல் தெரியவில்லையே' என,உத்தர பிரதேச முதல்வரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான யோகி ஆதித்யநாத் பற்றி முணுமுணுக்கின்றனர், அந்த மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள். மார்ச், ஏப்ரல் மாதங்களில், உ.பி., மாநிலத்தில் கொரோனா வேகமாக பரவத் துவங்கியது. 'முதல்வர் பதவியில் ஆதித்யநாத்துக்கு அனுபவம் இல்லை. அதனால் தான் முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுகிறார்' என, அனைவரும் விமர்சித்தனர். அப்போது, உ.பி., யில், ஒரு நாளைக்கு, 100 பேருக்கு மட்டுமே பரிசோதனை நடத்தப்பட்டது. அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்திய முதல்வர், அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். 'அடுத்த, 10 நாளைக்கு, தினமும், 1,000 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட வேண்டும். 11வது நாளில் இருந்து, தினமும், 5,000 பேருக்கும், 21வது நாளில் இருந்து, தினமும், 10 ஆயிரம் பேருக்கும் பரிசோதனை நடத்த வேண்டும்' என, உத்தரவிட்டார். சுகாதார அதிகாரிகளோ, 'இதெல்லாம் நடக்குற காரியமா' என, வழக்கம் போல் கிண்டலடித்தனர். ஆதித்யநாத்தோ, 24 மணி நேரமும், அதிகாரிகளை கண்காணித்து, வேலை வாங்கினார். அவரது முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது. இப்போது, தினமும், 10 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. தொடர் நடவடிக்கைகளால், உ.பி.,யில் வைரஸ் பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. எதிர்க்கட்சியினரோ, 'ஆதித்யாநாத்தை குறை சொல்லி அரசியல் செய்ய முடியாமல் போய் விட்டதே. உண்மையிலேயே, அவர் திறமைசாலி தான்' என, புலம்புலகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chakra - plano,யூ.எஸ்.ஏ
09-ஜூன்-202006:58:35 IST Report Abuse
chakra பொய் சொன்னால் போஜனம் கிடைக்காது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X