அமித்ஷா கருத்துக்கு ராகுல் கிண்டல்

Updated : ஜூன் 10, 2020 | Added : ஜூன் 08, 2020 | கருத்துகள் (57)
Share
Advertisement
அமித்ஷா கருத்து, ராகுல் கிண்டல்

புதுடில்லி : எல்லை பாதுகாப்பு குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்துக்கு, 'எல்லையின் உண்மை நிலவரம், அனைவரும் அறிந்தது தானே!' என, காங்., - எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.

லடாக்கின் கிழக்குப் பகுதியில், இந்திய -- சீன ராணுவத்தினர் இடையே, சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, இரு நாட்டு ராணுவ அதிகாரிகளின் உயர்மட்டக் குழு கூட்டம், சமீபத்தில் நடந்தது.இதற்கிடையே, பா.ஜ., ஏற்பாடு செய்திருந்த, 'ஆன்லைன்' பொதுக்கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று முன்தினம் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், 'இந்தியாவின் ராணுவக் கொள்கை மிக உறுதியானது. அமெரிக்கா, இஸ்ரேலுக்குப் பின், தன் எல்லைகளை பாதுகாத்துக் கொள்ளும் நாடு, இந்தியா தான் என்பதை, அனைத்து நாடுகளும் ஒப்புக் கொள்ளும்' என்றார்.இந்தக் கருத்து குறித்து, காங்., - எம்.பி., ராகுல், தன், 'டுவிட்டர்' சமூக வலைதள பக்கத்தில், நேற்று பதிவிட்டார். அதில், 'நம் எல்லைகளின் உண்மை நிலவரம் என்ன என்பது, அனைவரும் அறிந்தது தானே! மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்வதற்காக வேண்டுமானால், அப்படி கூறிக் கொள்ளலாம்' என, கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.-

Advertisement
வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
10-ஜூன்-202006:06:09 IST Report Abuse
தமிழ் மைந்தன் அப்போ இத்தனை ஆண்டுகலாக உங்க குடும்பம் எதை ....கொண்டிருந்தது..........
Rate this:
Cancel
balakrishnan - Mangaf,குவைத்
09-ஜூன்-202020:26:33 IST Report Abuse
balakrishnan ராகுல் உண்மையான இந்தியனாக இருந்திருந்தால் இதை சொல்லி இருக்க மாட்டார் .
Rate this:
Cancel
srinivasan - chaennal,இந்தியா
09-ஜூன்-202019:35:43 IST Report Abuse
srinivasan Don't cry Mr. Rahul your grand father only showed China this way. He fried China's premier telling India China Bai Bai. And lost Tibet Now China found a way to occupy other countries in this manner.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X